Author: Six Side Media

  • வேலையில் மனஅழுத்தம்| உணவு இடைவேளையில் நிகழ்ந்த அதிர்ஷ்டம்.. ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரராக மாறிய பெண்!

    அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கைவிடுவதில்லை. ஒருவேளை, அது கைகூடும் பட்சத்தில் அவர்களின் தலையெழுத்தே மாறிவிடும். ஆனால், சில நிமிடங்களில் லாட்டரி சீட்டு மூலம் பல கோடி ரூபாயை வென்றபோதும், அந்த நபர் அமைதியாக மீண்டும் வேலைக்குச் சென்றிருப்பது உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் போர்ட்ஸ்மவுத் (Portsmouth)பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அன்றைய தினம் வேலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின்போது நோர்போக் நகரில் உள்ள ‘லவ் ஃபுட் மார்ட்’ என்ற கடையில்…

  • வாரத்திற்கு 35 மணி நேர வேலை.. மாற்றத் துடிக்கும் நிறுவனங்கள்!! ஜெர்மனியில் நடப்பது என்ன?

    ஜெர்மனியில் உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில தொழில்துறைகளில் பணிபுரியும் ஒரு ஊழியர் வாரத்திற்கு 35 மணி நேர வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே சட்டமாக இருந்து வருகிறது. ஆனால், இதை மாற்றுவதற்கு அந்நாட்டைச் சார்ந்த கார் நிறுவனங்கள் தற்போது முயற்சித்து வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “வாழ, நேசிக்க, சிரிக்க அதிக நேரம் வேண்டும்” அதாவது “More time to live, love, laugh” என்ற முழக்கத்தை முன்வைத்து,…

  • ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

    சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்து டெல்லிக்கு, ஏர் இந்தியாவின் AI 151 என்ற விமானம், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று புறப்பட இருந்தது. சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மது வாசனை வீசுவதாக, பணியாளர்கள் சிலர் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விமானத்தில் ஆய்வு செய்ததில், இணை விமானி மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, விமானத்தில்…

  • அழிவின் விளிம்பில் 49,500 உயிர்கள்.. அதிகம் பாதிக்கப்பட்டது எவை? எச்சரிக்கும் IUCN Red List!

    மனிதன் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பே இங்கே வாழ்க்கை இருந்தது. அடர்ந்த காடுகளின் இருளுக்குள் நடந்த விலங்குகளும், மரக்கிளைகளில் கூடு கட்டிப் பாடிய பறவைகளும், மண்ணுக்குள் ஊர்ந்த சிற்றுயிர்களும், கடலின் ஆழத்தில் நீந்திய உயிரினங்களும் சேர்ந்து இந்தப் பூமியை உயிரோட்டமுள்ளதாக்கின. காலையில் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றிக் கேட்கும் பறவைகளின் சத்தம், ஒரு மரத்தின் நிழலில் நாம் இளைப்பாறும்போது, அதன் கிளையில் அமரும் ஒரு பறவை, மழைக்குப் பிறகு துள்ளிக்குதிக்கும் தவளை, மரத்தின் உச்சியில் அமர்ந்து பழம் கொத்தும்…

  • ஈரானின் 7 நாள் சமாதானத் திட்டத்தை நிராகரித்தார் ட்ரம்ப்: சர்வதேச ஊடகங்கள் தகவல்

    ஈரான் முன்வைத்த ஏழு நாள் சமாதானத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என ஈரான் முன்மொழிந்திருந்த நிலையில் ட்ரம்ப் அதனை நிராகரித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க ஈரான் முன்வந்திருந்தது. மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் இடைத்தேர்தல்களுக்குப்…

  • ட்ரம்ப் – சீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நிறைவு

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சர்வதேச வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் கடந்த 23ஆம் திகதி அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா…

  • கொங்கோ விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

    கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நேற்று (25) இடம்பெற்ற விமான விபத்தில் இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். கிக்விட்டில் இருந்து தலைநகர் கின்ஷாசாவுக்கு பயணித்த இராணுவ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கே பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. விபத்தில் இராணுவ நீதிமன்றத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய் டியெண்டே மற்றும் ஆயுதப் படைகளின் தணிக்கை ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும்,…

  • சிறுநீரக ​வைத்தியசாலையில் சிலிண்டர் வெடிப்பு – 7 பேர் காயம்

    பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  • சிலாபம் முதல் பொத்துவில் வரை கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

    சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் உயரமான அலைகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அமைந்துள்ள குறித்த கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருவளை முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கடற்பகுதிகளில் செயற்படும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும்…

  • புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவை சாடிய ட்ரம்ப்: கனடா பதிலடி

    கனடா, புலம்பெயர்தல் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாக ட்ரம்ப் சாடியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். கனடாவின் கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள, ட்ரம்ப், கனடா தனது புலம்பெயர்தல் கொள்கைகளால் தன்னையே அழித்துக்கொள்வதாக சாடியுள்ளார். அதாவது, சரியான பாதுகாப்புச் சோதனைகள் இல்லாமலே பல மில்லியன் புலம்பெயர்வோரை கனடா அனுமதிப்பதாகவும், அதன் மூலம் தன்னையே அழித்துக்கொள்வதாகவும் விமர்சித்துள்ளார் ட்ரம்ப். தனது சமூக ஊடகப்பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ள இடுகை ஒன்றில், கனடா அளவுக்கதிகமான மக்களை…