Category: இலங்கை செய்திகள்
-
அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்! துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்
கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பெரிய கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து…
-
தமிழக முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் இன்னும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அவரது செயற்பாடுகள் குறித்து தமக்கு நல்ல தகவல்களே கிடைப்பதாகவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.…
-
தையிட்டி காணி விவகாரம் – 5 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை
தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று (01) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தையிட்டி விவகாரம் வெறுமனே காணி உரிமைக்கான போராட்டம்…
-
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மனு தொடர்பான சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத்…
-
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் – உலக வங்கி 110 மில்லியன் டொலர் உதவி!
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் மிகக் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைக்கவும் மறுசீரமைக்கவும் இலங்கைக்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இன்று அங்கீகரித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) நெருக்கடி கால நிவாரணப் பிரிவின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியானது, சூறாவளியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீள ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும். அடிக்கடி ஏற்படும் தீவிர காலநிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில்,…
-
திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலிருந்து திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, இன்று மாலை 5 மணியிலிருந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட திலீபனுடைய சிலையை நினைவிடத்தில் மீள வைக்கக் கோரி இரவு பகலாக இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த தொடர் போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளன. அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்ட பொதுச் சுடரை தொடர்ச்சியாக எரிய விடப்பட்டு, திலீபனின்…
-
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரச நிதியில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் நவம்பர்…
-
எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,…
-
முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு ; வடையில் வெட்டுக்கிளி; வாடிக்கையாளர் அதிர்ச்சி!
மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம் (29) குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,…
-
நாளை முதல் கொழும்பு முழுவதும் மெட்ரோ பஸ் சேவை
கொழும்பு நகரம் முழுவதும் நாளை (29) முதல் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 121 பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக்…