Category: கனடா செய்திகள்
-
இந்தியாவுடன் 70 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டம்
இந்தியாவுடன் 70 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டமிட்டுள்ளது. கனடவின் வணிக அமைச்சர் மணீந்தர் சித்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உயர்த்தும் இலக்கை அறிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது. மணீந்தர் சித்து, அமெரிக்காவின் மில்வாக்கியில் நடைபெற்ற G20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியா-கனடா தலைவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு 70 பில்லியன் டொலர். இதை அடைய…
-
கனடா அரசின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்ற AI – நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா அரசின் இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. கனடா அரசின் Library and Archives Canada என்ற இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயன்றதாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் Transluce தெரிவித்துள்ளது. இந்த முயற்சி மே 28 மற்றும் ஜூன் 9 ஆகிய திகதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. Transluce நிறுவனம், இந்த தாக்குதல் முறைகள் முன்னதாக OpenAI-க்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட சில செயல்பாடுகளுடன் ஒத்ததாக இருந்தாலும், நேரடியாக OpenAI-ஐ குற்றம்…
-
கனடா லொட்டரியில் ரூ.217 கோடி வென்ற பஞ்சாபி இளைஞர்
கனடா லொட்டரியில் பஞ்சாபி இளைஞர் ரூ.217 கோடி வென்றுள்ளார். கனடாவில் வசிக்கும் பஞ்சாபி இளைஞர் அம்ரித்பால் சிங், வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவுக்கு பெரிய லொட்டரி பரிசை வென்றுள்ளார். அவர் Lotto 6/49 Gold Ball டிராவில் 3.2 மில்லியன் கனேடிய டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.216-217 கோடி) பரிசை பெற்றுள்ளார். அம்ரித்பால், செப்டம்பர் 19, 2026 அன்று சர்ரே நகரில் டிக்கெட் வாங்கியிருந்தார். முதலில் அவர் டிக்கெட்டை சரிபார்த்தபோது, வெறும் 32,000 கனேடிய டொலர் தான்…
-
எங்கு பார்த்தாலும் பாம்புகள்… கனேடிய நகரமொன்றில் அதிகரித்துவரும் பிரச்சினை
ஒரு வகை பாம்புகள் நடமாட்டம், மனித்தோபா நகரமொன்றிற்கு பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. மனித்தோபா மாகாணத்திலுள்ள Eriksdale என்னும் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்கள். அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் சகஜம்தான் என்றாலும், கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் பாம்புகளாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள் அந்நகர மக்கள். Garter snakes என்னும் ஒரு வகை பாம்புகளின் நடமாட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் Eriksdale Curling Club என்னும் அமைப்பின் தலைவரான லாரி…
-
கனடாவில் தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கி சூடு
கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகையகம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்து நேற்று அதிகாலை வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தாக்கி, சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் எந்தவொரு பணியாளரும் அங்கு இருக்கவில்லை. இதன் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தவர்களை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு…
-
கனடாவில் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய முன்மொழிவு!
கனடாவில் டீசல் எரிபொருள் விலையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான கூட்டாட்சி வரிகளை ரத்து செய்யும் புதிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான பியர் பொலியேவ் முன்மொழிந்துள்ளார். கனடா தனது தேசியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு டீசலை உற்பத்தி செய்கிறது. எனினும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள தடைகள் காரணமாகச் சில பிராந்தியங்கள் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய…
-
கனடாவில் தொடர் திருட்டு: 65 வயது முதியவருக்கு எதிராக வழக்கு!
கனடாவின் மில்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் எலோரா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வேளையில், மில்டனின் கேம்ப்பெல்வில் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டிற்குள் சந்தேகநபர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். ஏணி ஒன்றைப் பயன்படுத்தி வீட்டிற்குச் சென்ற சந்தேகநபர்,…
-
கனடாவில் விபத்தில் பலியான 12 வயது சிறுமி: நீதிமன்றம் விதித்த தண்டனை
12 வயதுச் சிறுமி உயிரிழக்கவும், அவரது தாயார் படுகாயமடையவும் காரணமான அபாயகரமான வாகன விபத்து வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடாவின் சிக்ஸ் நேஷன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான டேரிஸ் வில்சன் என்பவருக்கு நீதிமன்றம் ஒரு நாள் குறைந்த 2 ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி ஒன்டாரியோவின் பிராண்ட்போர்ட் பகுதிக்கு தெற்கே உள்ள ஓக்லாண்ட் வீதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது. மணிக்கு 50 கி.மீ…
-
கனடா நோர்த் பேயில் தாக்குதல் சம்பவம்: போதைப்பொருட்கள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
கனடாவின் நோர்த் பே பகுதியில் இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, 100,000 டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்கள், லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், ஒரு ஆணையும் பெண்ணையும் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிளவில் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் தடியால் தாக்கப்பட்டாரென்றும், மற்றொருவர்…
-
லொத்தர் சீட்டிலுப்பில் 1 மில்லியன் டொலர் பரிசு!
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ட்ரெவர் மற்றும் ஆம்பர் முல்லின்ஸ், கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற ‘லொட்டோ 6/49’ கோல்ட் போல் குலுக்கலில் 1 மில்லியன் டாலர்களைப் பரிசாக வென்று கோடீஸ்வரர்களாகியுள்ளனர். ஆரம்பத்தில் சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே கிடைத்திருக்கும் என்று நினைத்து, எங்கள் தேனிலவுப் பயணத்திற்குப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால் 1 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதை அறிந்ததும் எனது மனைவி ஆம்பர் உணர்ச்சிவசப்பட்டு 4 மணிநேரம் தொடர்ந்து…