Author: Six Side Media
-
ரஷ்யாவிற்கு எதிராக ரோபோக்களை தரையிறக்கி 3000 வீரர்களை..உக்ரைனின் சஃபாரி நடவடிக்கை
உக்ரைன் இராணுவம் தரை ரோபோக்களை ரஷ்ய போரில் களமிறங்கியதாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் 3,000 எதிரி வீரர்களைக் குறிவைத்து, தரை ரோபோக்களை களமிறக்கி உக்ரைன் சஃபாரி நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரைன் இராணுவ ட்ரோன் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யாவின் ஆழத்திற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்துகிறது. அந்த வகையில், புதிய சஃபாரி நடவடிக்கையில் ரஷ்ய முன்னணிப் படையின்…
-
ஐரோப்பாவின் விண்வெளி ஏவுதல் திட்டம்: பரிசீலனையில் கனடா, பிரித்தானியா, நார்வே நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியம் தங்களது ராக்கெட் ஏவுதல் திட்டங்களுக்கான பகுதிகளை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தங்களது லட்சிய விண்வெளி திட்டத்திற்கான ஏவுதளங்களை அமைக்க சில வெளிநாடுகளை தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அந்த வகையில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் ஆண்ட்ரியல் குபிலியஸ் அளித்த பேட்டியில், ஐரோப்பாவின் விண்வெளி திட்டங்களுக்கான ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க கனடா, பிரித்தானியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…
-
3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் 99 சதவீத மக்களை விட, KCL தனது கடந்த கால நிகழ்வுகளை இளம்…
-
யாழ் நல்லூரில் தியாக தீபம் திலீபனிற்கு அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள் கூட்டம்!
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது. அதன் போது ஈகை சுடரினை மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம்…
-
இலங்கை பாராளுமன்றத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழு
நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தூதுக்குழுவினர் செப்டெம்பர் 24ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன்போது , சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான பேராசிரியர் ஸ்வென் சிமொன் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரால்ஃப் சீக்காட்ஸ், ஐரோப்பிய மக்கள் கட்சி (EPP) குழுவின் வெளிவிவகாரம்…
-
தியாக தீபம் திலீபனின் நினைவாக பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தி பிரித்தானியாவில் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் லிவர்பூல், டார்பி சதுக்கம் பகுதியில் நேற்று (25.09) இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை மற்றும் இனவழிப்புக்கு எதிரான பரிகார நீதி மற்றும் திலீபனின் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து…
-
லண்டன் மருத்துவமனை அலட்சியத்தால் 19 வயது இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு!
லண்டனில் உள்ள பெத்லெம் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது சோவியா ராஜரத்தினம் என்ற இலங்கை தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9, 2021 அன்று இந்த சம்பவத்தில் , உரிய நேரத்தில் அவரை உயர் பாதுகாப்பு மறுவாழ்வுப் பிரிவுக்கு மாற்றியிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்கலாம் என தற்போது நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது இறப்பிற்கு…
-
வெடுக்குநாறி ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று(26) புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருகை தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை…
-
சீண்டிய பாகிஸ்தான்.. வெளுத்து வாங்கிய இந்தியா.. அதகளமான ஐ.நா. சபை!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வில் உரையாற்றியபோது, மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதுடன், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இந்தியாவை விமர்சித்தார். கடந்த ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலையிட்டதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு இந்தியா தனது ’Right of Reply’-ஐ பயன்படுத்தி பதிலளித்தது. அப்போது பேசிய ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முதன்மைத் தூதர் Petal…
-
பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை-100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து
கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த AI மென்பொருள்கள் மனிதர்களின் வேலைகளை பறித்துக்கொள்வதாக தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ’செயற்கை நுண்ணறிவின் தந்தை’ என்று அழைக்கபடும் ஜெஃப்ரி ஹின்டன் Geoffrey Hinton) கூட செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும், ஏலியன்களின் வருகையும் ஒன்றுதான் என்றும், எதிர்காலத்தில் தன்னைக்…