அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என ஈரான் முன்மொழிந்திருந்த நிலையில் ட்ரம்ப் அதனை நிராகரித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க ஈரான் முன்வந்திருந்தது.
மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் இடைத்தேர்தல்களுக்குப் பின்னர், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ட்ரம்ப் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தகவல் ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Leave a Reply