Category: பிரதான செய்தி

  • உ.பி | சாதியைக் காரணம் காட்டி சிகிச்சைக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் நடந்த பிரசவம்!!

    உத்தரப்பிரதேச மாநிலம் ப‌தோஹி மாவட்டத்தில், பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற 20 வயது பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஷார் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராணி என்ற அந்தப் பெண், பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி ஞான்பூரில் உள்ள மகாராஜா சேத் சிங் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அவரது சமூகத்தை அடையாளம் கண்ட பின்னர், அவரை அனுமதிக்க மறுத்ததாக குடும்பத்தினர்…

  • இந்தியாவுடன் 70 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டம்

    இந்தியாவுடன் 70 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்ய கனடா திட்டமிட்டுள்ளது. கனடவின் வணிக அமைச்சர் மணீந்தர் சித்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உயர்த்தும் இலக்கை அறிவித்துள்ளார். தற்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது. மணீந்தர் சித்து, அமெரிக்காவின் மில்வாக்கியில் நடைபெற்ற G20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியா-கனடா தலைவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு 70 பில்லியன் டொலர். இதை அடைய…

  • FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரம்: 6 வயது சிறுமியின் பங்கு

    FlyDubai விமான பேரழிவு தவிர்க்கப்பட்ட விவகாரத்தில் 6 வயது சிறுமி ஒருத்தி முக்கிய பங்கு வகித்துள்ளாள். விமானி ஒருவர், துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட Flydubai நிறுவன விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, விமானத்தை தரையில் மோத முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த சம்பவத்தை, அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் முதலான கட்டிடங்கள் மீது விமானம் மோதிய, 9/11 பேரழிவுடன் ஒப்பிடுகின்றன ஊடகங்கள்! புதன்கிழமையன்று, துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்டு ஒன்றரை…

  • ”ஈரான் மீது மீண்டும் தாக்குதல் சாத்தியமே’ – ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

    ஈரான் சமர்ப்பித்த போர்க்கள அமைதி மற்றும் போர்நிறுத்த திட்ட நிராகரிப்புகளுக்குப் பிறகு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் (Midterm Elections) பிறகு ஈரான் மீது மீண்டும் பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவது “சாத்தியமே” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பாகவும் தடைகளை நீக்குவது தொடர்பாகவும் ஈரான் அளித்த சமரச முன்மொழிவுகள் போதிய வலுவாக இல்லை எனக் கூறி அமெரிக்கா அவற்றை நிராகரித்துவிட்டது.…

  • ஃபிளைதுபாய் விமான சம்பவம் | விசாரணையில் வெளியான துணை விமானியின் பகீர் தகவல்கள்!

    துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும்…

  • உலகையே அச்சுறுத்திய 16 வயது சிறுவன் – KillSec ஊடுறுவல் குழுவின் முக்கிய புள்ளியை தூக்கிய Europol

    ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின்போது, KillSec எனப்படும் ஊடுறுவல் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக சந்தேகிக்கப்படும் 16 வயதான ருமேனிய இளைஞர் ஒருவர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயினின் அலிகான்டே நகரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், KillSec குழுவின் நிர்வாகி மற்றும் முக்கிய செயற்பாட்டாளர் என அவர் சந்தேகிக்கப்படுவதாகவும் Europol தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது மேலும் இருவர் பிரித்தானியா மற்றும் ருமேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், ஸ்பெயின், க்ரீஸ், ருமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் எட்டு…

  • “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” சர்ச்சையைக் கிளப்பிய எலான் மஸ்க்!! மெட்டாவுக்கு எதிரான போட்டி?

    உலகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக செயலிகளில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் முக்கியமானது. 300 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களைக் கொண்ட இந்தச் செயலில், ஏறத்தாழ ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில் தான், நேற்றைய தினம் ”இன்ஸ்டாகிராம் கணக்கை தான் நீக்கிவிட்டதாகவும், அந்தத் தளம் அடிப்படையிலேயே பெண்களை மையப்படுத்திய செயலி” என்றும் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது” என மீண்டும் ஒரு தெரிவித்திருக்கிறார். அவரது…

  • மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி! இரவோடு இரவாக மறைக்கப்பட்ட எழுத்துகள்!அதிகாரிகள் பணிநீக்கம்!

    தமிழ்நாட்டில்.. குறிப்பாக அரசு அமைக்கும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் இடம்பெறுவது வழக்கம்.. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வழிகள் மற்றும் தொலைவு விவரங்கள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக…

  • Sigma: “சின்ன பையன் சஞ்சய் இப்போ இயக்குநர் ஆகிட்டார்” – ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா & ஜோதிகா

    நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கும், ஜேசன் சஞ்சய்யின் அறிமுகத்திற்கும் வாழ்த்து தெரிவித்து சூர்யாவும், ஜோதிகாவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய்யை வாழ்த்திய ஜோதிகா, “அன்புள்ள ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினருக்கு, ‘சிக்மா’ திரைப்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பட விளம்பரங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு…

  • 23 நிமிடங்களில் வானத்தையே வண்ணமயமாக்கிய அதிசயம்: ஹாங்காங் விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்ட வானவேடிக்கை!

    சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 77ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஹாங்காங்கின் புகழ்பெற்ற விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்டமான தேசிய தின வானவேடிக்கை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 23 நிமிடங்கள் நீடித்த இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன வானவேடிக்கைப் பொருட்கள் விண்ணில் செலுத்தப்பட்டன . இவை துறைமுகத்தின் இரு கரைகளையும், வானத்தையும் பல்வேறு வண்ணங்களால் அலங்கரித்துள்ளன. இந்தக் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியைக் நேரில் கண்டுகளிப்பதற்காக, சுமார் 3 இலட்சத்து…