Author: Six Side Media

  • 100 ஆண்டுகளில் முதன்முறை.. தாலிபன் பாணியில் கொரில்லா தாக்குதல்.. US-வை எதிர்கொள்ளத் தயாராகும் கனடா!

    அமெரிக்கா – கனடா இடையே உறவு விரிசலடைந்து வரும் நிலையில். அமெரிக்கா ஒருவேளை கனடாவின் மீது ராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கனடா ரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உலகம் முழுவதும் வரி விதிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதை, மீண்டும்…

  • சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது 22ஆவது திருத்தச் சட்டமூலம்..

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (25) நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பதிவாகின. இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்தை, சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன கடந்த 22ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

  • பாலைவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! எல் நினோவால் நிகழ்ந்த இயற்கை அதிசயம்!

    ஒரு மாற்றம் எப்போதும் அழிவை மட்டுமே கொண்டு வருவதில்லை… சில நேரங்களில் அழிவாகத் தோன்றும் ஒரு நிகழ்வே, புதிய உயிர்ப்புக்கான தொடக்கமாக மாறிவிடுகிறது. “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து, பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்” என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, இயல்பாக பசுமையாகவும் வளமாகவும் இருக்கும் ஒரு நிலம், வறட்சியின் கொடுமையால் தனது இயல்பை இழந்து, பாலை நிலமாக மாறும் என்பதை இந்த வரிகள் எடுத்துரைக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான…

  • ரூ.5,000 கோடியில் லேசர் ஆயுதங்கள்.. ஈரானை வீழ்த்த களமிறங்கிய அமெரிக்கா!

    அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியா, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ட்ரோன்களால் தாக்கி அழித்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பல்கள் மீது, ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும்…

  • பின்லேடனுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான்.? நிதியுதவி செய்த அமெரிக்கா.? – வெளியான பின்னணி!!

    சோவியத் யூனியனுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் போரின்போது, அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஒசாமா பின்லேடன் மற்றும் அய்மான் அல்-சவாஹிரி (Ayman al-Zawahiri) உள்ளிட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் சையத் (Mushahid Hussain Syed) கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த முஷாஹித் ஹுசைன், சமீபத்தில் அளித்த பேட்டியில், 1979 முதல் 1989-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான போரின்போது…

  • பயங்கரவாத ஆதரவு குறித்து கேள்வி – பதிலளிக்க முடியாமல் சென்ற பாகிஸ்தான் பிரதமர்!

    நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வருகை தந்தபோது, அங்கு கூடி இருந்த செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் அவரை நோக்கிச் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக, “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் எப்போது நிறுத்தும்?” மற்றும்…

  • தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு

    தமிழக அரசு மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாத விரக்தியில் சிலர், தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தன் தாயைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தான் அதைப் பொறுத்துக்கொண்டதாகவும், ஆனால் தன்…

  • முக்கியத்துவம் வாய்ந்த நுமான் மலையைக் கைப்பற்றியதாக யேமன் அறிவிப்பு

    யேமன் அரசுக்கு சொந்தமான படைகள், லஹிஜ் மாகாணத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நுமான் மலையின் (Mount Numan) உச்சிப் பகுதியையும், ‘தார் அல்-காஃபிர்’ (Dar al-Kafir) பகுதியையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளன. அப்படைகள் வெளியிட்ட அறிக்கையின்படி, தெற்கு லஹிஜ் மாகாணத்தில் உள்ள அல்-வாஸியா (Al-Wazi’iyah) மற்றும் அல்-மதரிபா (Al-Madaribah) ஆகிய மாவட்டங்களை நோக்கிய நிலையில் அமைந்துள்ள நுமான் மலையின் உச்சி மற்றும் தார் அல்-காஃபிர் பகுதியை இலக்காகக் கொண்டு, இரவு நேரத்தில் ஒரு விரைவான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…

  • ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து? – சட்டப்பேரவையில் பரபரப்பு

    ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்கக் கோரி முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் அவையில் அமளி ஏற்பட்டது. குறிப்பாக, 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கூடுதல் சுயாட்சி தொடர்பான தீர்மானம் மற்றும் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போதைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தின் நகல்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே,…

  • ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

    ஹோர்முஸ் நீரிணையில் நேற்று வியாழக்கிழமை கப்பல்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய கப்பல் கண்காணிப்புத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாள் புதன்கிழமை 14 கப்பல்கள் பயணித்ததாகவும் அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நேற்று கப்பல்களின் எண்ணிக்கை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில கப்பல்கள் தங்கள் டிரான்ஸ்பாண்டர்களை அணைத்துவிட்டு நீர்வழிகளில் பயணிக்கக்கூடும், எனவே அவை இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களின்…