Category: முக்கிய செய்தி

  • ஈரானின் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதம்

    மத்திய கிழக்கில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்காவின் பல தசாப்த ராணுவ வியூகம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அனைத்து அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.…

  • லனார்க் கவுண்டியில் காணாமல் போன 3வது நபரின் மனித எச்சங்கள் மீட்பு

    கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லனார்க் கவுண்டி (Lanark County), ஸ்மித்ஸ் பால்ஸ் (Smiths Falls) அருகே உள்ள கிராமப்புற நிலப்பகுதியில் ஒன்ராறியோ மாகாணக் பொலிஸார் (OPP) நடத்திய சோதனையில், மூன்றாவது நபரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் லாரன்ஸ் பெர்ட்ரிம் (Lawrence Bertrim) என்பவருடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்மித்ஸ் பால்ஸ் நகரின் மையப்பகுதியில் காணாமல் போனபோது அவருக்கு வயது 42. இவரது மரணம் குறித்த தகவலுக்கு…

  • ஓமன் மீது குண்டுவீசுவோம்..’ 2வது முறையாக ட்ரம்ப் Open Warning.. உடனே ஈரான் கொடுத்த பதிலடி!

    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் ஆகிய இரண்டுதரப்பின் பக்கமும் சாயாமல் நடுநிலையில் இருந்துவந்த ஓமன், இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல்களால் பல்வேறு தாக்குதல் மற்றும் பாதிப்புகளுக்கும் உள்ளானது. இப்படி இருக்கும் சூழலில் சமீபத்திய ஈரான் அறிவிப்பால் கடுப்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓமன் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என இரண்டாவது முறையாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஓமனை குண்டுவீசி தகர்த்துவிடுவோம் என ட்ரம்ப் எச்சரிப்பது இது முதல்முறையல்ல. இதற்கு 2 மாதங்களுக்கு முன்பும் ‘ஹார்முஸ்…

  • மெலனியா ட்ரம்ப் திடீர் மாயம்

    ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் மீது குறிவைத்து, கொலை செய்வோம் என்று ஈரான் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மெலனியா ட்ரம்பை கண்காணித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஈரான், உலக சுதந்திரப் போராளிகள் மூலம், அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், மெலனியா ட்ரம்ப்…

  • செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு

    செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி 3 ஆம் கட்டத்தின் 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதனிடையே, யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி நேற்றைய தினம் புதிதாக 10 என்பு கூடுகள் வெளிப்பட்ட நிலையில், ஏற்கனவே வெளிப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான…

  • முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

    முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார். இந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

  • பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிப்பு

    அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலாஸ்காவின் கொடியாக் நகருக்கு தென்மேற்கே 161 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:39 மணிக்கு 4.6 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் பதிவானதாக மாகாணத்தின் ‘EmergencyInfoBC’ இணையதளம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொடியாக் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிலர் நில…

  • மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!

    ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.…

  • 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி

    தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு…

  • புதிய வரிகளால் சில கனடிய நிறுவனங்களின் விற்பனை பாதியாகக் குறையக்கூடும் என தொழிலாளர்கள் அச்சம்

    கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலக்கெடு நெருங்கும் வேளையில், அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய வரிகளால் தங்களின் விற்பனையில் பாதி வரை இழக்க நேரிடும் என பல கனடிய சிறு தொழில்களை மேற்கொள்வோர் அஞ்சுகின்றனர். புதன்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய வரிகள், எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், மதுபானம், மரம், ஹாக்கி மட்டைகள் மற்றும் தொல்பொருட்கள் உட்பட சுமார் $28 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்களின் மீது விதிக்கப்படவுள்ளன. இதுவரை CUSMA (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) மூலம்…