Category: முக்கிய செய்தி
-
”இஸ்ரேல் நாடே இல்லாமல் போகக்கூடும்..” – எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!!
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தொடங்கிய மோதல் தற்போது 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே பல முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேபோல, லெபனானில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல், சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல் என மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தச்சூழலில் தான்,…
-
வரலாறு காணாத கடன்சுமையில் அமெரிக்கா? கருவூலத்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
அமெரிக்க கருவூலத் துறை (Treasury Department) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டின் மொத்த தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.3,800 லட்சம் கோடி ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது, அந்நாட்டின் தேசியக் கடன் சுமார் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் கடன் சுமை 40.05 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. அதாவது, ட்ரம்ப் முதன்முறையாக…
-
ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடை – சீனா கடும் கண்டனம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் “பொருளாதார டி-டே” பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார். மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட…
-
கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். குறித்த சந்திப்பில்,வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்…
-
புதிய பொருளாதாரத் தடை – ட்ரம்பின் வியூகத்தை விமர்சித்த ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார். “பொருளாதார டி-டே” (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு…
-
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ‘சந்து டிரேடிங் கம்பனி’ எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீகாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும்…
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இன்றைய அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
-
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய அகழ்வின்போது நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதன் 56ஆவது மற்றும் இறுதி நாளான இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப்…
-
டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவரை சந்திக்கவுள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் நேரில் சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் தனது அடுத்த ஆசியப் பயணத்தின்போது கிம் ஜாங் உன்னை சந்திப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், நவம்பரில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அதாவது APEC மாநாட்டையொட்டி இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
-
சிங்கப்பூர் குடியரசின் 9-வது ஜனாதிபதி மாண்புமிகு தர்மன் சண்முகரத்தினம் அவர்கள்
அறிவு, பண்பு, சேவைக்கு எடுத்துக்காட்டு நம் தமிழ் இனத்தின் பெருமை 🇸🇬 #PresidentTharman #Singapore #TamilPride 1. பூர்வீகம் & குடும்பம் 🇸🇬 – முழு பெயர்: Tharman Shanmugaratnam – பிறந்த தேதி: 25 பிப்ரவரி 1957 – பிறந்த இடம்: சிங்கப்பூர் – இனம்: இலங்கை தமிழ் வம்சாவளி. அவரின் தந்தைவழி, தாய்வழி மூதாதையர்கள் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் – மதம்: இந்து 2. பெற்றோர் – தந்தை: பேராசிரியர் K. Shanmugaratnam…