Category: முக்கிய செய்தி
-
புதிய வரிகளால் சில கனடிய நிறுவனங்களின் விற்பனை பாதியாகக் குறையக்கூடும் என தொழிலாளர்கள் அச்சம்
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலக்கெடு நெருங்கும் வேளையில், அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய வரிகளால் தங்களின் விற்பனையில் பாதி வரை இழக்க நேரிடும் என பல கனடிய சிறு தொழில்களை மேற்கொள்வோர் அஞ்சுகின்றனர். புதன்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய வரிகள், எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், மதுபானம், மரம், ஹாக்கி மட்டைகள் மற்றும் தொல்பொருட்கள் உட்பட சுமார் $28 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்களின் மீது விதிக்கப்படவுள்ளன. இதுவரை CUSMA (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) மூலம்…
-
கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு தள்ளிவைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் வரை கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படாது என்று பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) அறிவித்துள்ளார். டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029 வரை) கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் எதிர்காலம் குறித்த விவாதம் தெளிவான மற்றும் அமைதியான சூழலில் நடக்க…
-
கல்கரி மிருகக்காட்சிசாலையில் ஒரு வயது நிரம்பிய ‘ஃபிட்ஸ்’ (Fitz) என்ற கிரிஸ்லி கரடி வெறியேறியுள்ளது.
ஆகஸ்ட் 16 காலை சுமார் 7:30 மணியளவில், பொதுமக்களின் வருகைக்கு முன்பாக ‘ஃபிட்ஸ்’ என்ற கிரிஸ்லி கரடி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறியுள்ளது. உடனடியாக அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விலங்கு பராமரிப்புக் குழு மற்றும் கல்கரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த குழுவினர் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய கரடியை கண்டுபிடித்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்கள், ஊழியர்கள் அல்லது விலங்குகள் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பொதுமக்கள் உயிருக்கு…
-
இம்ரான் வழக்கில் அதிரடி திருப்பம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில வழக்கில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டார் என்ற வதந்திகள்…
-
போர்க்களத்தில் குதித்த பிரிட்டன்.. உக்ரைன் போரில் திருப்பம்!
பிரிட்டனின் இரண்டு நிறுவனங்கள் தயாரித்த ட்ரோன்கள், ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டன், உக்ரைன் நெருக்கடியை திட்டமிட்டு மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளார்.…
-
டிரம்ப்பின் பிற தூதர்களுடன் ஒப்பிடும்போது கனடாவில் ஹூக்ஸ்ட்ராவின் தவறான செயல்கள் குறைவானவையே!
கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra), கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவது பற்றி கிண்டலாகப் பேசியதாலும், கனடாவின் கொள்கைகளை விமர்சித்ததாலும் அவருக்கு எதிராக 1,00,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் நாடாளுமன்றத்தில் மனுவில் கையெழுத்திட்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற (persona non grata) வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் கனடிய ராஜதந்திரிகள், ஹூக்ஸ்ட்ராவின் பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்தாலும், ஒரு தூதரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான தீவிரமான சட்டவிரோதச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஐஸ்லாந்தை 52-வது…
-
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன்…
-
பிலிப்பைன்ஸ் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – இரு மாணவர்கள் பலி!
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து பாடசாலை…
-
சீனாவுக்கு பயணமாகும் ஜோர்தான் மன்னர்
ஜோர்தான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது சர்வதேச அரசியல், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை…
-
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட’சமிட்புர சது’
‘சமிட்புர சது’ என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 28 வயதுடைய திமுத்து சதுரங்க எனப்படும் ‘சமிட்புர சத்து’ ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார். ‘சமிட்புர…