Category: பிரதான செய்தி
-
சிலாபம் முதல் பொத்துவில் வரை கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை
சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் உயரமான அலைகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அமைந்துள்ள குறித்த கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருவளை முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கடற்பகுதிகளில் செயற்படும் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும்…
-
ரூ.5,000 கோடியில் லேசர் ஆயுதங்கள்.. ஈரானை வீழ்த்த களமிறங்கிய அமெரிக்கா!
அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியா, குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ட்ரோன்களால் தாக்கி அழித்து வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பல்கள் மீது, ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும்…
-
தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
தமிழக அரசு மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாத விரக்தியில் சிலர், தன்னை பெற்ற தாயைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தன் தாயைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தான் அதைப் பொறுத்துக்கொண்டதாகவும், ஆனால் தன்…
-
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து? – சட்டப்பேரவையில் பரபரப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுக்கக் கோரி முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் அவையில் அமளி ஏற்பட்டது. குறிப்பாக, 2000-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கூடுதல் சுயாட்சி தொடர்பான தீர்மானம் மற்றும் 2024-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தற்போதைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்தின் நகல்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே,…
-
‘ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது’ அர்ஜென்டினா ஜனாதிபதி
தற்போது ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டதாக அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலெய் குற்றம்சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலெய் இன்று ஐ.நா. சபையில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மோதல்களையும், போர்களையும் தடுப்பதில் ஐ.நா.தோற்றுவிட்டது என ஜேவியர் மிலெய் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா.சபையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், மோதல்களையும்,போர்களையும் தடுப்பதில் ஐ.நா.தோற்றுவிட்டது. குழப்பம், வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்வதற்கும், சர்வாதிகாரம் தழைப்பதற்கும் ஐ.நா. அனுமதித்துவிட்டது. தற்போது ஐ.நா.ஒரு…
-
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அரசுமுறை விருந்துபசாரம்
அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24) இரவு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் வழங்கிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்துள்ளார். சீன மக்கள் தற்போது பாரம்பரிய, மத்திய இலையுதிர் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், குடும்பங்கள் ஒன்றுகூடும் இந்தத் திருநாளை முன்னிட்டு…
-
அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள், கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய மீன்பிடி இழுவைப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும்…
-
வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சீன ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உற்சாகமான முறையில் வரவேற்றார். இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
முதல் விண்வெளி படையை உருவாக்கிய ராயல் விமான படை
பிரித்தானியா தனது செயற்கைக்கோள்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தனது முதல் விண்வெளி படையை உருவாக்கியுள்ளது. “No. III Space Effects Squadron” எனப்படும் இந்த புதிய பிரிவு, செயற்கைக்கோள்களை குறிவைக்கும் எதிரி நடவடிக்கைகளை தடுக்க, பாதிக்க, மறுக்கும் திறனுடன் செயல்படும். இந்த படை, பிரித்தானியாவின் கப்பல்கள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் ஏவுகணை எச்சரிக்கை அமைப்புகளை வழிநடத்தும் முக்கிய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும். பிரித்தானிய அரசு சமீபத்தில் வெளியிட்ட “Space Strategy” திட்டத்தின்…
-
முன்பள்ளி சிறுவர்களின் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் முன்பள்ளி சிறுவர்களில் 64 சதவீதமானோர் நாளொன்றுக்கு 30 நிமிடங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்துவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஆய்வில் பங்கேற்ற சிறுவர்களில் சுமார் 32 சதவீதமானோர் நாளொன்றுக்கு 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினித் திரைகளைப் பயன்படுத்தியவாறு உணவு உட்கொள்வதாகவும் ஆய்வில்…