அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (24) இரவு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்தின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் வழங்கிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் தற்போது பாரம்பரிய, மத்திய இலையுதிர் விழாவைக் கொண்டாடி வரும் நிலையில், குடும்பங்கள் ஒன்றுகூடும் இந்தத் திருநாளை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஷி ஜின்பிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அவரது மனைவி பெங் லியுவான் மற்றும் சீனப் பிரதிநிதிகள் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
ஷி ஜின்பிங்கின் இந்த அரசுமுறைப் பயணம், அமெரிக்கா – சீனா உறவுகளில் இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான முக்கிய சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.
Leave a Reply