Category: பிரதான செய்தி

  • சபரிமலையில் தங்க கிரீடம் மாயம்

    சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) பவுன் எடை…

  • பிராந்திய அமைதி குறித்து பாகிஸ்தான்,ஈரான் இடையில் பேச்சு

    ஐ.நா.பொதுச் சபையின் கூட்டங்களுக்கு இடையே பிராந்திய அமைதி குறித்து பாகிஸ்தான் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர். பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக்தார், ஐ.நா.பொதுச் சபையின் கூட்டங்களுக்கு இடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தார். எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இரு அதிகாரிகளும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாகவும், பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில்…

  • ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

    ரஷ்யா–உக்ரைன் போரில் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81-வது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய ஜெலன்ஸ்கி, இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளின் குடிமக்கள் ரஷ்யாவின் போரில் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் “ஏமாற்று முறைகள் மற்றும் தந்திரங்கள்” மூலம் ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் போர்க்களத்தில் உயிரிழப்பதாகவும்…

  • சினிமா ‘ஒரு இயக்குநராக அப்பாவிடம் பிடித்தது இதான்..’ ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்

    சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், ஜேசன் சஞ்சய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நேர்காணல்…

  • சீன அதிபரை புகழ்ந்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

    சீன அதிபர் XI ஜின்பிங்கை, டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ’சிறந்த தலைவர்’ எனப் பாராட்டியுள்ளார். சீன அரசு தொலைக்காட்சியான CCTV-க்கு அளித்த பேட்டியில் மஸ்க் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். Xi ஜின்பிங்கின் தலைமையின் கீழ் சீனா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக மஸ்க் கூறினார். சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் தரமும் செழிப்பும் அதிகரித்திருப்பது தெரிகிறது எனத் தெரிவித்தார்.…

  • சவூதியைவிட்டு வெளியேறும் படைகள்? சிக்கலில் இத்தாலி!

    மத்திய கிழக்கில் ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏமனின் ஹவுதி அமைப்பின் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. சவூதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் சவூதி நகரப் பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர்களில் சவூதி பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஹவுதிகள் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், சவூதி அதிகாரிகள்…

  • வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா மறுபடியும் ஒரு புதிய ஏவுகணையை சோதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இந்த முறை சாதாரண ஏவுகணை இல்லை. ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியதாக கூறப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏவுடன் நேரிலேயே சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வான்சான் பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள்…

  • ஈரானிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க பிரதிநிதி இடையில் சந்திப்பு

    ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சிக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப்பிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை ஈரானின் அரசுத் தொலைக்காட்சி நேற்று உறுதிப்படுத்தியது. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் நிபந்தனைகளைத் தெளிவுபடுத்துவதும் அவற்றை எடுத்துரைப்பதுமே இச்சந்திப்பின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் நிபந்தனைகளும் கோரிக்கைகளும் மாறவில்லை என்று தூதரக மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு ஈரானியத் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஈரானின் கோரிக்கைகள் தொடர்பான தனது கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றினால் மற்றும் போதுமான நடைமுறை…

  • “ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது” – நடிகை அம்பிகா

    நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, “அம்மா இறப்பதற்கு முன்பே இந்தச் சொத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் அம்மாவை எதிர்த்து நான் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.…

  • ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் – இருவர் உயிரிழப்பு

    ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல், தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, 16 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. Dujuan புயல் மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் (89 மைல்) வேகத்தில் காற்றுடன், டோக்கியோவுக்கு அருகிலுள்ள கட்சூரா (Katsuura) நகருக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில், புயல் கடற்கரையை விட்டு விலகி,…