Category: பிரதான செய்தி
-
டிக்டொக் நிறுவனத்துக்கு 100 மில்லியன் டொலர் அபராதம்
டிக்டொக் செயலியும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸும் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்துக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், சிறார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடர் மாற்றங்களை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. ஏதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவிருந்த நடுவர் விசாரணைக்கு சற்று முன்பு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. சிறார்களைச் செயலியில் அடிமையாக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க மாநில ஒன்றுடன் டிக்டொக் மேற்கொண்ட முதல் உடன்பாடு இணக்கப்பாடு இதுவாகும்.…
-
அமெரிக்காவின் ‘விமான’ தடைகளிலிருந்து விலக்கு கோருகிறது ஈராக்!
ஈரானிய விமானங்களுக்குச் சேவை வழங்கும் அல்லது உதவிகளைச் செய்யும் விமான நிலையங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருந்தது. இந்நிலையில், இதிலிருந்து சில ஈராக் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அமெரிக்காவிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈராக் பிரதமர் அலி அல்-ஸைதியின் (Ali al-Zaidi) அலுவலகம் தெரிவித்துள்ளது. மருத்துவச் சிகிச்சை, கல்வி, ஆன்மீகச் சுற்றுலாக்கள் மற்றும் சிவிலியன்களின் நலன் சார்ந்த மனிதநேயக் காரணங்களுக்காக விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை…
-
பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.
-
பேங்கொக்கில் கடும் வெள்ளம்
கனமழையால் பேங்கொக்கில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் சுமார் 300 மில்லிமீற்றர் மழை பெய்ததால், முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பல பகுதிகளில் மக்கள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், கால்வாய்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு மாற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பேரிடர் நிவாரண…
-
அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
அச்சுவேலி பகுதியில் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தாக்குதல் காட்சிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சீர்திருத்தப் பாடசாலையில் தங்கியுள்ள மாணவர்கள் சிலரை, மற்றுமொரு மாணவர் குழுவினர் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த சீர்திருத்தப் பாடசாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…
-
ஐரோப்பாவின் விண்வெளி ஏவுதல் திட்டம்: பரிசீலனையில் கனடா, பிரித்தானியா, நார்வே நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியம் தங்களது ராக்கெட் ஏவுதல் திட்டங்களுக்கான பகுதிகளை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தங்களது லட்சிய விண்வெளி திட்டத்திற்கான ஏவுதளங்களை அமைக்க சில வெளிநாடுகளை தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அந்த வகையில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் ஆண்ட்ரியல் குபிலியஸ் அளித்த பேட்டியில், ஐரோப்பாவின் விண்வெளி திட்டங்களுக்கான ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க கனடா, பிரித்தானியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…
-
லண்டன் மருத்துவமனை அலட்சியத்தால் 19 வயது இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு!
லண்டனில் உள்ள பெத்லெம் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது சோவியா ராஜரத்தினம் என்ற இலங்கை தமிழ் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9, 2021 அன்று இந்த சம்பவத்தில் , உரிய நேரத்தில் அவரை உயர் பாதுகாப்பு மறுவாழ்வுப் பிரிவுக்கு மாற்றியிருந்தால் இந்த மரணத்தைத் தடுத்திருக்கலாம் என தற்போது நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தனது இறப்பிற்கு…
-
சீண்டிய பாகிஸ்தான்.. வெளுத்து வாங்கிய இந்தியா.. அதகளமான ஐ.நா. சபை!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஐ.நா. பொதுச்சபையின் 81-ஆவது அமர்வில் உரையாற்றியபோது, மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதுடன், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாகவும் இந்தியாவை விமர்சித்தார். கடந்த ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலையிட்டதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு இந்தியா தனது ’Right of Reply’-ஐ பயன்படுத்தி பதிலளித்தது. அப்போது பேசிய ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முதன்மைத் தூதர் Petal…
-
வாரத்திற்கு 35 மணி நேர வேலை.. மாற்றத் துடிக்கும் நிறுவனங்கள்!! ஜெர்மனியில் நடப்பது என்ன?
ஜெர்மனியில் உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில தொழில்துறைகளில் பணிபுரியும் ஒரு ஊழியர் வாரத்திற்கு 35 மணி நேர வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே சட்டமாக இருந்து வருகிறது. ஆனால், இதை மாற்றுவதற்கு அந்நாட்டைச் சார்ந்த கார் நிறுவனங்கள் தற்போது முயற்சித்து வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “வாழ, நேசிக்க, சிரிக்க அதிக நேரம் வேண்டும்” அதாவது “More time to live, love, laugh” என்ற முழக்கத்தை முன்வைத்து,…
-
ஈரானின் 7 நாள் சமாதானத் திட்டத்தை நிராகரித்தார் ட்ரம்ப்: சர்வதேச ஊடகங்கள் தகவல்
ஈரான் முன்வைத்த ஏழு நாள் சமாதானத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க முடியும் என ஈரான் முன்மொழிந்திருந்த நிலையில் ட்ரம்ப் அதனை நிராகரித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறக்க ஈரான் முன்வந்திருந்தது. மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் இடைத்தேர்தல்களுக்குப்…