Category: பிரதான செய்தி

  • சூர்யாவுடன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலி

    நடிகர் சூர்யாவிற்கு இந்த 2026 ஆம் வருடம் எல்லாமே சூப்பராக அமைந்து வருகிறது. முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. கருப்பு திரைப்படம் 300 கோடி ரூபாவுக்கும் மேலான வசூல் வேட்டை செய்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா – மமிதா பைஜு நடித்த விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானது, இந்த படமும் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அடுத்த சூர்யா…

  • போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு

    போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை காரணமாக, விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலையில் தானாக விமானத்தை வழிநடத்தும் அமைப்பு செயலிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா எயார் நிறுவனங்களிடம் சுமார் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன. குறித்த மென்பொருள் கோளாறு தொடர்பில்…

  • ஈரான் உடனான போர் குறித்து ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு

    ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்து அவர்கள் சரணடைந்தால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதளபாதாளத்திற்கு சரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலக அளவில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டு, அதன் விலையில் தொடர் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எனது நிர்வாகத்தின் கீழ் எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து…

  • யாழில் பணம், கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது

    யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த குழுவொன்றை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று (27) மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது, காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் 9 இலட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரும் கைது செய்யப்பட்டதுடன், குறித்த…

  • கூகுளின் இணையத்தை அலங்கரித்த சிறப்பு டூடுல்!

    உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி, கூகுள் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளமாக கூகுள் விளங்கி வருகிறது. தேடுபொறி சேவையுடன், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் வழங்கி வருகிறது. கூகுளின் பிறந்தநாளை முன்னிட்டு, அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கமான கூகுள் லோகோவுக்கு பதிலாக சிறப்பு வடிவமைப்புடன் கூடிய…

  • கனடாவில் எகிறும் கருணைக்கொலை எண்ணிக்கை! மனித உரிமை அமைப்பு கடும் கவலை

    கனடாவில் மருத்துவ உதவியுடன் கூடிய கருணைக்கொலை (MAID) மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்து வருகிறதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சில பிராந்தியங்களில் பதிவாகும் மொத்த உயிரிழப்புகளில் 10-ல் ஒரு மரணம் மருத்துவ உதவியுடனான தற்கொலையினாலேயே நிகழ்கிறது எனப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கனடா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்ட ‘மருத்துவ உதவி இறப்பு திட்டம்’ (Medical Assistance in Dying – MAID) மூலம் உயிரிழந்தோரின்…

  • பேச்சுவார்த்தைக்கு No சொன்ன ட்ரம்ப்.. ஹார்முஸை கண்ணிவெடிகளால் நிரப்பிய ஈரான்?

    ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. அமெரிக்கா–ஈரான் மோதலை முடிக்க, ஈரான் 7 நிபந்தனைகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் கத்தார் மூலம் அறிவித்தது. அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துதல், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல், ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறப்பது மற்றும் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் இந்த…

  • கிவு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து! 12 பேர் உயிரிழப்பு

    கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் (DR Congo) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிவு ஏரியில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள இட்ஜ்வி (Idjwi) தீவுப் பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பலர் ஏரி நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மீட்புக் குழுவினரும் மீனவர்களும் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதுவரை…

  • அமெரிக்க தாக்குதல் – ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு ஏற்பட்ட ஆபத்து

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை இடிபாடுகளுக்குள் இருந்து ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான மொஹ்சென் ஹைதாரி (Mohsen Heydari), தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக நடைபெற்ற கூட்டுத் தாக்குதலில் காயமடைந்த மொஜ்தபா கமேனி, சிகிச்சைக்காக டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அந்த வைத்தியசாலை வளாகத்தையும் இலக்கு…

  • ஐ.நா பொதுச்சபையில் இந்தியாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய ரஷ்யா

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில்(UNSC) பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது என நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். இதனூடாக இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், மேற்கத்திய நாடுகளுக்குக் கூடுதல் நிரந்தர இடங்கள் ஒதுக்குவதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,…