Category: பிரதான செய்தி

  • காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் தாக்கம்

    மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. , காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த…

  • பஸ்லலித் CCIBக்கு சற்றுமுன் அழைத்துசெல்லப்பட்டார்

    லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து இவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இவரை தொடர்ந்து பலர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அறிவிக்கப்படவுள்ளது!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்சங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கட்டளை அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இரு தரப்பினரின்…

  • வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு

    “இரத்த நிலவு” (Blood Moon) என அழைக்கப்படும் பகுதி சந்திர கிரகணம் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி நிகழவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் சென்று சந்திரனில் படுவதால், சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும், இந்த சந்திர கிரகணம் காலை 8.04 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளதால், இந்தியாவிலிருந்து இதனைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இரத்த நிலவு” என அழைக்கப்படும்…

  • 117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

    உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார். ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு…

  • பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்

    மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன. இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது. இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம்…

  • உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!

    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி ‘மூஸ்’ வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர். விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.…

  • கனடாவில் விமான விபத்து- இருவர் காயம்

    கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேர்லின் ஜீ.ரீ. ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள பெடிஸ் பொன்ட் ஏரியில் தரையிறங்க முயன்றபோது திடீரென மின்சக்தியை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விமானம் ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விழுந்துள்ளது. விமானத்தில்…

  • ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டடங்கள்!

    ஜப்பானின் ஹோன்ஷு கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், கரையோரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தின்போது, பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டோக்கியோ வரை அதிர்வுகள் உணரப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

  • செப்டம்பர் 05 முதல் ஜனாதிபதி அநுர தலைமையில் மக்கள் பேரணிகள் ஆரம்பம்!

    தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு மக்கள் பேரணித் தொடரொன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் . களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும்…