Category: பிரதான செய்தி
-
ஈரான்-அமெரிக்கா போருக்குப் பிறகு தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தில், எரிபொருள் தட்டுப்பாடு முக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய பதற்றமான போர் சூழலில் உலக எண்ணெய் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. போர்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 43 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை வழங்கும் நாடுகளை பாதித்துள்ளன. ஈரான், ரஷ்யா-உக்ரைன், லிபியா போன்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும், அமெரிக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவும் சேர்ந்து 2025-ல் நாளொன்றுக்கு சுமார் 4.5 கோடி பேரல்…
-
ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!
உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு,ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தியில்,…
-
இணையத்தில் வைரலாகும் ரஜினி – ஸ்ரேயா சரண் செல்பி!
‘தர்மன்’ படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு ஜாம்பவானைச் சந்திக்கும்போது, ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது அவசியம்தானே?” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில், சிம்ரன், ஸ்ரேயா சரண்,…
-
பிரான்ஸை உலுக்கிய சூறாவளி – 41 பேர் படுகாயம்
பிரான்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதில் சுமார் 41 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள பொமாஸ் கிராமத்தில், நேற்று மாலை 117 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்த கிராமம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்த பலத்த காற்றால்,மரங்கள் சாய்ந்து, வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் வீடுகள் இடிந்தும் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட…
-
கனடா உயர்ஸ்தானிகர் – மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், (H.E.Isabelle Martin) நேற்று (24) மத்திய மாகாண ஆளுநர் வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோவை கண்டியிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இதன்போது மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், ‘டிட்வா’ பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறை வளங்களை உயர்மட்டத்தில் பயன்படுத்தி அத்துறையை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.…
-
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக,…
-
தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மரண விசாரணை நேற்று (24) அன்று கம்பளை வைத்தியசாலையில் நடைபெற்றபோதே இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார். சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட…
-
ஈழமுரசின் இன்றைய ராசி பலன் (25.08.2026)
இன்று (25) மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். மேலும் சித்த யோகம் கூடிய தினத்தில், சிம்ம ராசியில் சூரியன் நுழைகின்றார், அங்கு கேதுவுடன் இணைய உள்ளார். சிம்ம ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. குரு – சந்திரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். இன்று மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள். மேஷம் ராசி பலன் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்தும் கடன் வாங்குவதைக் கருத்தில்…
-
டிரம்பின் மனைவி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் மனைவி குறித்து எந்த செய்திகள் வெளியானாலும் அதனை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. ஆனால், அவர் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புதிய செய்தி, பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் மீது டிரம்ப் உடன் நெருங்கி பணியாற்றிய ஒருவரே கூறியிருப்பது தான் பரபரப்பின் உச்சம். அதாவது, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில், ஜாக் கோச்சியரெல்லா என்ற நெறியாளர் Podcast நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், வெள்ளை மாளிகையின்…
-
காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் தாக்கம்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. , காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த…