Category: பிரதான செய்தி

  • அமெரிக்காவில் தயாரிப்பு என விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்மார் அறிமுகப்படுத்திய Trump Mobile T1 ஸ்மார்ட்போன், ஆரம்பத்தில் “அமெரிக்காவில் தயாரிக்கப்படும்” என விளம்பரப்படுத்தப்பட்டது. எனினும், 2025 ஆகஸ்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தொலைபேசியின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நிறுவனத்தின் இணையதளத்தில் ‘Made in the USA’ என்ற வாசகமும் நீக்கப்பட்டு, அமெரிக்க மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு என மாற்றப்பட்டது. அத்துடன், முன்பதிவுக்காக செலுத்திய 100 டொலர் தொகை , தொலைபேசி வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல…

  • ஜப்பான் ஃபூஜி மலையில் 7 வயது மகனைத் தனியாக விட்டுச் சென்ற தந்தை

    ஜப்பானின் மிக உயரமான ஃபூஜி மலையேற்றத்தின்போது, களைப்பால் அழத் தொடங்கிய 7 வயது மகனை வழியில் தனியாக விட்டுவிட்டு மலையேறிச் சென்ற தந்தையின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜப்பானின் நாகோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 7 வயது மகன் மற்றும் மூத்த மகனுடன் ஃபூஜி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் உயரத்தில் (6-வது முகாம் அருகே) சென்றுகொண்டிருந்தபோது, 7 வயது சிறுவன் கடும்…

  • யாழில் பல வீடுகளில் பதிவான திருட்டுச் சம்பவங்கள் – மூவர் கைது

    யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

  • ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து

    ஐரோப்பாவில் நடைபெறும் சர்வதேச சிற்றூந்து பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய சிற்றூந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ‘மிச்சலின் லீ மேன்ஸ்’ கிண்ணத்துக்கான சிற்றூந்து பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டிருந்தபோது, அவர் ஓட்டிய சிற்றூந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர் முழுப் பாதுகாப்புடன் நலமாக உள்ளார் என்றும்…

  • இனப்படுகொலை குற்றச்சாட்டு.. நெதன்யாகு மீது சர்வதேச கைது நடவடிக்கை.. துருக்கி அரசாங்கம் அதிரடி!!

    2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 76 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும், காசா…

  • இனி இஸ்ரோ ராக்கெட் ஏவாது : அது தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!

    இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இஸ்ரோ நிறுவனம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ஏவியதில் தொடங்கி, சொந்தமாக விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் ராக்கெட்களை உருவாக்குவது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது. அதன் உச்சமாக சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவுக்கே விண்கலனை அனுப்பி இஸ்ரோ உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு உலகிலேயே செயற்கைக்கோள்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் துல்லியமாக விண்ணில் ஏவி, சர்வதேச அளவில்…

  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!

    ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு இபராகி (Ibaraki) மாகாணத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதுடன், இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். என்.எச்.கே. (NHK) செய்திச் சேவையின்படி, சைதாமா, சிபா மற்றும்…

  • முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ…

  • உசைன் போல்டையே விஞ்சிய வேகம்.. ஓடிய மனித ரோபோவுக்கு நேர்ந்த சோகம்!

    சீனாவில், உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (World Humanoid Robot Games)நடைபெற இருக்கிறது. 51 வகையான போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில்16 நாடுகளைச் சேர்ந்த 666 குழுக்களுடைய 2,000-க்கும் மேற்பட்ட மனித உருவ ரோபோக்கள் (Humanoid Robots) களமிறங்குகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியைப் பரிசோதிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் மனிதர்களின் அன்றாடப் பணிகளுக்கு ரோபோக்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, இப்போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதையொட்டி, போட்டிக்கு முன்னோடியாக மனித…

  • அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் மனைவி, ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!

    அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீ;டிக்க வேண்டாம் என அவரது மனைவி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும்,…