பிரான்ஸை உலுக்கிய சூறாவளி – 41 பேர் படுகாயம்

பிரான்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதில் சுமார் 41 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள பொமாஸ் கிராமத்தில், நேற்று மாலை 117 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்த கிராமம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

இந்த பலத்த காற்றால்,மரங்கள் சாய்ந்து, வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் வீடுகள் இடிந்தும் சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *