Category: பிரதான செய்தி
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திர சாதனை!
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திரமான சாதனை சுவீடன் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 30 ஆயிரத்து 607 மீற்றர் உயரத்தில் இருந்து, கைபேசி உறைக்குள் வைக்கப்பட்ட கைபேசியொன்று கீழே வீசப்பட்டுள்ளது. இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அந்தக் கைபேசி எந்தச் சேதமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ‘ரைனோஷீல்ட்’ மற்றும் ‘சென்ட் இன் டூ ஸ்பேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சுவீடன் நாட்டின் கிருனா பகுதியில் அமைந்துள்ள விண்வெளி மையத்துக்கு…
-
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்கிலும் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறுவதற்காகப் லண்டன் வந்தடைந்துள்ளனர்.
இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்கிலும் அமெரிக்காவில் 6 ஆண்டுகள் வசித்த பிறகு, மீண்டும் பிரித்தானியாவில் குடியேறுவதற்காகப் லண்டன் வந்தடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள வான் நாய்ஸ் (Van Nuys) பகுதியில் இருந்து தனிச்சிறப்பு பட்டய விமானம் (Private charter flight) மூலம் புறப்பட்ட இத்தம்பதியினர், பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி (7) மற்றும் இளவரசி லிலிபெட் (5) ஆகியோர் செப்டம்பர் மாதம் முதல் பிரித்தானியப் பள்ளிகளில் தங்களது…
-
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தியாகி பொன் சிவகுமாரனின் தியாகங்களை நினைவு கூர்ந்து சிறப்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
-
”கோபாலா நீ வாடா” – மனதை உருக்கும் தாயின் பிரார்த்தனை
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.
-
நேபாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு – 8 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
-
மெக்சிகோவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து
மெக்சிகோவின் துல்டெபெக் (Tultepec) நகரில் உள்ள பட்டாசு தயாரிப்பு மையத்தில் இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டு தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலானது. அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகளால் தொழிற்சாலை கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. விண்ணை முட்டும் அளவிற்குத் தீப்பிளம்புகளும் புகையும் எழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
UNRWA மையத்தில் இஸ்ரேலிய சோதனையின் போது பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டான்
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள கஃப்ர் அகப் (Kafr Aqab) பகுதியில் இயங்கி வரும் UNRWA தொழிற்பயிற்சி மையத்தை இஸ்ரேலிய காவல்துறையும் எல்லை பாதுகாப்புப் படைகளும் வாகனங்களுடன் முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இந்த மையம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்களுக்குத் தொழில் கல்வி வழங்கி வருகிறது. இந்தச் சோதனையின் போது நேரடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 5 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு பாலஸ்தீன சிறுவன் சுடப்பட்டக் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த நடவடிக்கை…
-
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!
சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தை பிறந்தது முதல் 17 வயது நிறைவடையும் வரையில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மொத்தமாக சுமார் ரூ.53 இலட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவி வழங்கப்படவுள்ளது. குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை பெற்றோருக்குக் குறைக்கும் வகையிலும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த…
-
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல் ஜசீரா மற்றும் ஜியோ ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, சம்பவம் இடம்பெற்றபோது PIMS மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் 16 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்பட்டதாகவும், ஏனைய 15…
-
“கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது..” – கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான கிருத்தி சனோன், தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நகைக்கடை விளம்பரம் ஒன்றில் ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கு இத்தகைய ஆடைகள் உகந்ததல்ல என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், “பெண்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும்…