Category: பிரதான செய்தி
-
’செவிலியர்’ ஆன கழுதை..? ஆன்லைன் போர்டலை அதிர வைத்த சம்பவம்!
மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் பதிவு தொடர்பான ஆன்லைன் நடைமுறை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுதையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நர்சிங் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம், விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் கல்வித் தகுதிகள் முறையாக சரிபார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேச நர்ஸ் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் போர்ட்டரில், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் மற்றும் அடையாளம் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதைச் சோதிப்பதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டதாக NSUI மாநில துணைத் தலைவர்…
-
இடிக்கப்படுகிறதா ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? மகள் சௌந்தர்யா சொன்ன முக்கியத் தகவல்!
சென்னையின் பல முக்கிய அடையாளங்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கும்… அந்த வகையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமான ஒரு இடம்தான் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்! ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது.. ரசிகர் மன்றப் பணிகள் குறித்து ஆலோசிப்பது.. என பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த மண்டபம் சாட்சியாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க, 36 ஆண்டுகளாக ரஜினிகாந்த் குடும்பத்துடன் பயணித்து வந்த இந்த மண்டபம் இடிக்கப்பட உள்ளதாகவும் அங்கு நட்சத்திர ஹோட்டல் வர…
-
‘சிக்மா’ Pre-Release நிகழ்வில் ஜேசன் சஞ்சய் பங்கேற்காதது ஏன்?
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. எனினும், திரைப்படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கும் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட ஜேசன் சஞ்சய்க்கு வைரஸ் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தமிழ் குமரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் Pre-Release நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும்,…
-
174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ: அவருக்கு எனது வீரவணக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு!
டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘flydubai (FZ1073)’ வானூர்தியை விபத்துக்குள்ளாக்க முயன்ற இணை விமானியுடன் போராடி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களின் “விவரிக்க முடியாத வீரத்தை” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டியுள்ளார். வானூர்தி காக்பிட்டில் (Cockpit) இணை விமானி கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியதிலும், வானூர்தியின் அமைப்புகளைச் சேதப்படுத்தி வானூர்தியை கீழே சாய்க்க முயன்றபோதும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார்…
-
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் – உலக வங்கி 110 மில்லியன் டொலர் உதவி!
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் மிகக் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைக்கவும் மறுசீரமைக்கவும் இலங்கைக்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இன்று அங்கீகரித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) நெருக்கடி கால நிவாரணப் பிரிவின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியானது, சூறாவளியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கான போக்குவரத்து இணைப்புகளை மீள ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும். அடிக்கடி ஏற்படும் தீவிர காலநிலை மாற்றங்களைத் தாங்கும் வகையில்,…
-
திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலிருந்து திலீபனுடைய சிலை அகற்றப்பட்டதை கண்டித்து, இன்று மாலை 5 மணியிலிருந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட திலீபனுடைய சிலையை நினைவிடத்தில் மீள வைக்கக் கோரி இரவு பகலாக இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த தொடர் போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளன. அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்ட பொதுச் சுடரை தொடர்ச்சியாக எரிய விடப்பட்டு, திலீபனின்…
-
பிரபஞ்சத்தின் புது வரவு – தூசி வளையத்துக்குள் ஒளிந்திருந்த இராட்சத இளம் கோள்!
அண்டவெளியில் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே பழமையான ‘எலியாஸ் 2-24 பி’ (Elias 2-24b) என்ற இளம் புறக்கோள் ஒன்றை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள், உருவத்தில் வியாழன் கிரகத்தை விடப் பெரியதாகும். நாசாவின் (NASA) புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்தபோதே இந்தக் கண்டுபிடிப்பு வெளியானது. இந்தக்கோள் 10 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே வயதுடையதால், இது அறிவியல் ரீதியாக ‘இளம் கோள்’ எனக் கருதப்படுகிறது.…
-
மனித உதவியின்றி 116 ட்ரோன்கள்.. இனி ஆழ்கடலையும் ஆளப்போகும் சீனா!
சீன ஆராய்ச்சியாளர்கள் மனித தலையீடு இன்றி, கடலுக்கு அடியில் 116 நீர்மூழ்கி ட்ரோன்களை, ஒரே நேரத்தில் இயக்கிப் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். 50 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பிரத்யேக பரிசோதனை இதில் மேற்கொள்ளப்பட்டது. 116 ட்ரோன்களும் தொடர்ச்சியாக 34 நிமிடங்கள் நீரினடியில் 500 மீட்டர் தொலைவிற்குத் தங்களுக்குள் வழிகாட்டிச் சீரான வரிசையில் பயணித்தன. சீனா செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் தயாரிப்பு, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் வேகமாய் முன்னேறி வருகிறது.…
-
சுந்தர் பிச்சை ஒரு அரக்கன் – ட்ரம்பின் வார்த்தையால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டத்தின்போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரக்கன் எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸுக்கர்பெர்க், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டேரியோ அமோடி உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு மற்றும் நவீன ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்காணிப்பதற்கான கட்டமைப்பை…
-
கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது குழந்தை
ஹூலா ஹூப் வளையத்தில் சென்று வரும் கின்னஸ் சாதனையை, தந்தையுடன் இணைந்து 3 வயது குழந்தை முறியடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ் (வயது 41) . இவருடைய மனைவி ஜெனிபர் ரஷ். இவர்களுக்கு ஜெரெமி (வயது 12) மற்றும் பீட்டர் (வயது 10) ஆகிய மகன்களும், பெலிசிட்டி (வயது 3) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் ஜெரெமி மற்றும் பீட்டர் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலுடன், கண்களை கட்டிக்கொண்டு சாண்ட்விச்…