மனித உதவியின்றி 116 ட்ரோன்கள்.. இனி ஆழ்கடலையும் ஆளப்போகும் சீனா!

சீன ஆராய்ச்சியாளர்கள் மனித தலையீடு இன்றி, கடலுக்கு அடியில் 116 நீர்மூழ்கி ட்ரோன்களை, ஒரே நேரத்தில் இயக்கிப் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். 50 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பிரத்யேக பரிசோதனை இதில் மேற்கொள்ளப்பட்டது. 116 ட்ரோன்களும் தொடர்ச்சியாக 34 நிமிடங்கள் நீரினடியில் 500 மீட்டர் தொலைவிற்குத் தங்களுக்குள் வழிகாட்டிச் சீரான வரிசையில் பயணித்தன.

சீனா செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் தயாரிப்பு, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் வேகமாய் முன்னேறி வருகிறது. இந்த நிலையில், கடலுக்கு அடியில் மனிதர்களின் எந்தவித உதவியும் இன்றி, ஒரேநேரத்தில் 116 நீர்மூழ்கி ட்ரோன்களை வெற்றிகரமாக இயக்கி சீனா கின்னஸ் படைத்துள்ளது. 50 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பிரத்யேக பரிசோதனை இங்கு மேற்கொள்ளப்பட்டது. 116 ட்ரோன்களும் தொடர்ச்சியாக 34 நிமிடங்கள் நீரினடியில் 500 மீட்டர் தொலைவிற்குத் தங்களுக்குள் வழிகாட்டிச் சீரான வரிசையில் பயணித்தன.

சீனாவைச் சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிகல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. பொதுவாக கடலுக்கு அடியில் கம்பியில்லாத் தொடர்பாடல் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்களைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால், சீன ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் தானியங்கித் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தன்னாட்சி நீரடி ட்ரோன் தொழில்நுட்பம் வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் அடிவாரத்தின் துல்லியமான வரைபடங்களை உருவாக்குதல், கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்கள், கேபிள்களை ஆய்வு செய்தல், கடல்சார் ஆராய்ச்சி மற்றும் கடலடி உயிரினங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் ஆகியவற்றுக்கு இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *