Category: பிரதான செய்தி
-
கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது குழந்தை
ஹூலா ஹூப் வளையத்தில் சென்று வரும் கின்னஸ் சாதனையை, தந்தையுடன் இணைந்து 3 வயது குழந்தை முறியடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ் (வயது 41) . இவருடைய மனைவி ஜெனிபர் ரஷ். இவர்களுக்கு ஜெரெமி (வயது 12) மற்றும் பீட்டர் (வயது 10) ஆகிய மகன்களும், பெலிசிட்டி (வயது 3) என்ற மகளும் உள்ளனர். மகன்கள் ஜெரெமி மற்றும் பீட்டர் ஆகியோர் தந்தையின் வழிகாட்டுதலுடன், கண்களை கட்டிக்கொண்டு சாண்ட்விச்…
-
அரண்டுபோன பாகிஸ்தான் ராணுவம்.. அதிரடி காட்டும் தாலிபான்!
அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரிட்டிஷ் காலத்தில் டுராண்ட் கோடு பொதுவான எல்லையாக முடிவு செய்யப்பட்டது. இதனை அப்போதைய ஆப்கானிய மன்னர்கள் ஏற்காத நிலையில், பின்னர் வந்தவர்களும் அதனை ஏற்கவில்லை. இந்த சூழலில் அங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவர்களும் இந்த டுராண்ட் கோடு எல்லையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சமீபகாலமாக இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. எல்லையில் சிறு சிறு மோதல்கள் வெடித்த நிலையில், அது சில மாதங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கு…
-
சேதமடையும் சீனப் பெருஞ்சுவர்.. சமூக ஆர்வலர்கள் கவலை!
மங்கோலியா, மன்சூரியா உள்ளிட்ட அப்போதைய அண்டை நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சீனாவில் வடக்கு எல்லைப் பகுதியில் எழுப்பப்பட்ட சுவர்தான் இந்த சீனப் பெருஞ்சுவர். சுவர் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், சீனாவை ஆண்ட வெவ்வேறு மன்னர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் சுவரின் வெவ்வேறு பகுதிகள் கட்டப்பட்டன. கிறிஸ்து பிறப்பிற்கு முன் 7 ஆம் நூற்றாண்டிலேயே சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சொல்லப்படும் நிலையில், 1368 காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மிங் வம்சத்தினர் சுவரை கற்களால்…
-
ஹமாஸின் உயர்மட்டத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு
காசா நகரில் உள்ள அல்-நஸ்ர் பகுதியில் இன்று(29) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் வட காசா பிராந்தியத் தளபதி இஸ் அல்-டின் அல்-பெய்க் (Izz al-Din Al-Beik) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதல்கள் மற்றும் படைகளுக்கெதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், புதிய போராளிகளைச் சேர்த்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவரைக் குறிவைத்துத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்…
-
கனடா நோர்த் பேயில் தாக்குதல் சம்பவம்: போதைப்பொருட்கள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
கனடாவின் நோர்த் பே பகுதியில் இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, 100,000 டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்கள், லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், ஒரு ஆணையும் பெண்ணையும் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிளவில் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் தடியால் தாக்கப்பட்டாரென்றும், மற்றொருவர்…
-
Avengers பாணியில் களமிறங்கும் ‘Robot Army’.. ரஷ்யாவுக்கு காத்திருக்கும் பேராபத்து!
2015-இல் வெளியான ‘Avengers: Age of Ultron’ திரைப்படத்தில் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்குவது அறிவியல் புனைகதையாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அதேபோன்ற ஒரு காட்சியை நிஜ உலக போர்க்களத்தில் உருவாக்கும் முயற்சியில் உக்ரைன் இறங்கியுள்ளது. ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில், ’Army of Robots’ என்ற புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் திட்டத்தை உக்ரைன் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் மைகைலோ ஃபெடோரோவ் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், போர்க்களத்தில் மனித வீரர்களுக்கு பதிலாக ரோபோக்களை…
-
முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு ; வடையில் வெட்டுக்கிளி; வாடிக்கையாளர் அதிர்ச்சி!
மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றையதினம் (29) குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து, மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இவ்விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,…
-
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள்
நேபாளப் பெருவெள்ளம் கொரத்தாண்டவமாடி ஒரு மாதம் ஆன நிலையிலும், தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளன சில கனேடிய குடும்பங்கள். நேபாளப் பெருவெள்ளம் ஆடிய கோரத்தாண்டவத்தின் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னமும் காணவில்லை. நேபாளப் பெருவெள்ளத்தில் பலியான 1,400க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 5,600க்கும் மேலானவர்கள் நிலை இன்னமும் தெரியவில்லை. நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமானவர்களில், 29 பேர் கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள்.…
-
’அமெரிக்காவிடம் அடிபணிய மாட்டோம்..’ பாகுபலி காட்சியை பதிவிட்ட ஈரான் தூதரகம்!
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற 81வது ஐ.நா. பொதுச் சபையில் பேசிய ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் “நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம், தடைகள். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானிய மக்களின் உறுதியை மட்டுமே வலுப்படுத்தும்” என்று கூறினார். மேலும் எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தசூழலில் ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் உரையை மேற்கோள்…
-
சிவகார்த்திகேயன் சம்பளத்தால் அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது சேயோன் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அதை தொடர்ந்து பார்கிங் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சத்ய ஜோதி நிறுவனத்துகாக தான் படம் நடிக்கவிருந்தார். ஆனால், சிவகார்த்திகேயன் தனக்கு 60 கோடி ரூபா சம்பளம் கேட்க, அதற்கு சத்யஜோதி மறுத்ததாகவும், அதனால் தான் வெங்கட்பிரபு படம் தள்ளி போனதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில்…