Category: பிரதான செய்தி
-
23 நிமிடங்களில் வானத்தையே வண்ணமயமாக்கிய அதிசயம்: ஹாங்காங் விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்ட வானவேடிக்கை!
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 77ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஹாங்காங்கின் புகழ்பெற்ற விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்டமான தேசிய தின வானவேடிக்கை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 23 நிமிடங்கள் நீடித்த இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன வானவேடிக்கைப் பொருட்கள் விண்ணில் செலுத்தப்பட்டன . இவை துறைமுகத்தின் இரு கரைகளையும், வானத்தையும் பல்வேறு வண்ணங்களால் அலங்கரித்துள்ளன. இந்தக் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியைக் நேரில் கண்டுகளிப்பதற்காக, சுமார் 3 இலட்சத்து…
-
ஹோர்முஸ் நீரிணை வழியே 2.5 மில்லியன் பீப்பாய்களுடன் பயணித்த மசகு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஓமான் கடற்பரப்பிற்கு அருகே, 2.5 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரமாண்ட கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே, அனுமதிக்கப்படாத பாதையில் இந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் உத்தியோகபூர்வமாக…
-
கனடா அரசின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்ற AI – நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா அரசின் இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. கனடா அரசின் Library and Archives Canada என்ற இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயன்றதாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் Transluce தெரிவித்துள்ளது. இந்த முயற்சி மே 28 மற்றும் ஜூன் 9 ஆகிய திகதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. Transluce நிறுவனம், இந்த தாக்குதல் முறைகள் முன்னதாக OpenAI-க்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட சில செயல்பாடுகளுடன் ஒத்ததாக இருந்தாலும், நேரடியாக OpenAI-ஐ குற்றம்…
-
எங்கு பார்த்தாலும் பாம்புகள்… கனேடிய நகரமொன்றில் அதிகரித்துவரும் பிரச்சினை
ஒரு வகை பாம்புகள் நடமாட்டம், மனித்தோபா நகரமொன்றிற்கு பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. மனித்தோபா மாகாணத்திலுள்ள Eriksdale என்னும் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்கள். அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் சகஜம்தான் என்றாலும், கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் பாம்புகளாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள் அந்நகர மக்கள். Garter snakes என்னும் ஒரு வகை பாம்புகளின் நடமாட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் Eriksdale Curling Club என்னும் அமைப்பின் தலைவரான லாரி…
-
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிட அனுமதி உள்ளிட்ட சில குடிவரவு தொடர்பான கட்டணங்களை 20 மடங்கு வரை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை இன்றுமுதல்(01.11.2026) நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இதுவரை 10,000 யென் ஆக காணப்பட்ட நிரந்தர வதிவிட அனுமதிக்கான கட்டணம் 200,000 யென் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 6,000 யென் நிலையான கட்டணமாக அறவிடப்பட்டு வந்த விசா தொடர்பான கட்டணத்திற்குப் பதிலாக,…
-
துபாய் விமானப் பயணம் டிசம்பர் வரை ரத்து: SIA
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) துபாய் – சிங்கப்பூர் இருவழி விமானப் பயணத்தை டிசம்பர் முதலாம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் அரசியல் பதற்றம் நீடிப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியது. சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் SQ494, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் SQ495 ஆகிய இரு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை தொடர்ந்து மாறுவதால் நிறுவனத்தின் மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படாத விமானச் சீட்டுக்கான…
-
தமிழக முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் இன்னும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. அவரது செயற்பாடுகள் குறித்து தமக்கு நல்ல தகவல்களே கிடைப்பதாகவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.…
-
தையிட்டி காணி விவகாரம் – 5 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை
தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பிரம்மாண்ட விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று (01) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தையிட்டி விவகாரம் வெறுமனே காணி உரிமைக்கான போராட்டம்…
-
அதிக செல்போன் பயன்பாடு.. சிறார் உட்காரும் நிலையிலும் கவனம் தேவை
சமீபகாலமாகவே சிறார்கள் மத்தியில் செல்ஃபோன் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. செல்ஃபோன் பயன்படுத்துவதே, குழந்தைகளின் உடல்நலன் மற்றும் மனநலனில் ஆபத்து ஏற்படுத்திவிடும் என பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வரும் நிலையில், சிறார்கள் செல்ஃபோனை எப்படி உட்கார்ந்து பார்க்கிறார்கள் என்பதும் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக உருவெடுத்துள்ளது. பல குழந்தைகள் நீண்ட நேரம் செல்ஃபோன் பார்க்கும்போது தலைகுனிந்த படியும், முதுகுத்தண்டை வளைத்தபடியும் உட்கார்ந்து பயன்படுத்துகின்றனர். இதே போன்று ஒரே நிலையில் அதிக நேரம் இருந்தால், பல்வேறு உடல்நல பிரச்சினைகள் சந்திக்க…
-
’செவிலியர்’ ஆன கழுதை..? ஆன்லைன் போர்டலை அதிர வைத்த சம்பவம்!
மத்தியப் பிரதேசத்தில் நர்சிங் பதிவு தொடர்பான ஆன்லைன் நடைமுறை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுதையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நர்சிங் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டதாக கூறப்படும் இந்தச் சம்பவம், விண்ணப்பதாரர்களின் அடையாளம் மற்றும் கல்வித் தகுதிகள் முறையாக சரிபார்க்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேச நர்ஸ் பதிவு கவுன்சிலின் ஆன்லைன் போர்ட்டரில், விண்ணப்பதாரரின் ஆவணங்கள் மற்றும் அடையாளம் எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன என்பதைச் சோதிப்பதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டதாக NSUI மாநில துணைத் தலைவர்…