Category: பிரதான செய்தி
-
12ஆம் திகதி என்ன நடக்கப் போகிறது?
“என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் நேற்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி…
-
நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
நேபாள சுரங்கப்பாதையில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு மீட்பு
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவின் போது, ஒரு நீர்மின் நிலையத்தின் நிலத்தடியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் திரிசூலி 3A (Trishuli 3A) நீர்மின் திட்டப் பகுதியும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இயந்திரப் foreman மற்றும் இயந்திர மேற்பார்வையாளர் (mechanical supervisor) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளம்…
-
டிட்ச்-2 காட்டுத்தீயை ஏற்படுத்திய நபரின் தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு
டிட்ச்-2 காட்டுத்தீயை ஏற்படுத்திய ஜேசன் ஹால்கெட் (Jason Halkett) என்பவரின் தண்டனை அறிவிப்பு, மாண்ட்ரீல் லேக் க்ரீ நேஷன் பேண்ட் அலுவலகத்தில் (Montreal Lake Cree Nation Band Office) நீதிமன்றப் பணிகள் அதிகமாக இருந்த காரணத்தால், தொடர்ந்து நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளவேனில் காலத்தில் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கு வடக்கே உள்ள வெயாக்வின் பகுதியில் பிரம்மாண்டமான டிட்ச்-2 காட்டுத்தீயை ஏற்படுத்தியதை ஹால்கெட் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார். இந்தத் தீ 2,00,000 ஹெக்டேர் பரப்பளவை எரித்து நாசமாக்கியதுடன்,…
-
“குழந்தைகள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்” Hardship Camp-க்கு அனுப்பும் சீன பெற்றோர்!!
கோடை விடுமுறை என்றாலே வீடியோ கேம்ஸ் விளையாடுவது, நண்பர்களுடன் பொழுதுபோக்குவது என குழந்தகளுக்கு சந்தோஷம்தான். ஆனால், சீனாவில் நகர்புறங்களில் வாழும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முற்றிலும் வித்தியாசமான விடுமுறையை ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்கள், குழந்தைகளை “Hardship Camp” எனப்படும் கடின உழைப்பு முகாம்களுக்கு அனுப்புகின்றனர். இந்த முகாம்களில் குழந்தைகள் விவசாய வேலைகள் செய்வது, உருளைக்கிழங்கு தோண்டுவது, மரப்பட்டைகளை உரிப்பது, பன்றிகளுக்கு உணவு கொடுப்பது, விறகு வெட்டுவது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். இதற்காக பெற்றோர்களே…
-
ரஷ்யாவுக்குச் சொந்தமான சுற்றுலா கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-இல் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான ‘நாஃப்டோகாஸ்’ (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்றியது. இதை எதிர்த்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (The Hague) நாஃப்டோகாஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில், 4.22 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும்…
-
அடுத்தகட்ட தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறிய ஒற்றை கருத்தால் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. மேலும் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் முக்கிய வருமானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ள நிலையில், அதனை ஏற்றுமதி செய்ய மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன் காரணமாக…
-
கென்யாவில் டாடா நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கென்யா நாட்டின் அதிபராக இருக்கும் வில்லியம் ரூட்டோ, கஜியாடோ மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற ‘டாடா கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘மகாடி சோடா’, கென்யாவில் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அந்தப் பகுதியில் கனிம வளங்களை எடுத்து வருகிறது. ஆனால், இவ்வளவு நீண்ட காலமாக ஒப்பந்த உரிமையை வைத்திருந்தும், உள்ளூர் மக்களுக்கோ அல்லது…
-
இந்திய நிறுவனத்துடன் ஊழல் குற்றச்சாட்டு.. பதவியை ராஜினாமா செய்த எஸ்டோனியா அமைச்சர்!
உக்ரைன் போருக்கு உதவுவதற்காக 155mm பீரங்கி குண்டுகளைக் கொள்முதல் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் எஸ்டோனியா பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதற்காக, இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட முன்னனுபவமே இல்லாத இந்திய நிறுவனத் தொடர்புடைய ‘டாட்டாசெல்’ (Datasel SRL) என்ற நிறுவனத்திற்கு முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயுதங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமலும், பெறப்பட்ட சில ஆயுதங்கள் தரமற்றவையாகவும் இருந்தது தணிக்கையில் தெரியவந்தது. இந்த தவறான கொள்முதல் நடவடிக்கை மற்றும் குளறுபடிகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்று, தாம் பதவியிலிருந்து விலகுவதாக எஸ்டோனியாவின்…
-
சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு
நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின்…