Category: பிரதான செய்தி

  • ‘குடு சலிந்து’ வழக்குக் கோப்புகள் மாயம் – 10 பேரிடம் விசாரணை

    ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார். காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப்…

  • கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

    கொள்ளுப்பிட்டி, 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக…

  • ஐந்து லெபனானிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது

    கடந்த சில மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து லெபனானிய பொதுமக்களை (ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல) இஸ்ரேல் விடுவித்துள்ளது.  1980களின் நடுப்பகுதியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட லெபனானின் யூத சமூகத் தலைவர்களின் (“12 ராஜரீக தியாகிகள்”) உடல்களைத் தேடித் கண்டுபிடித்து மீட்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோமில் நடைபெற்ற இந்தத் பேச்சுவார்த்தைகளில், இஸ்ரேல் மற்றும் லெபனானின் உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்கத் தூதர் மைக்கேல் இசா மற்றும் இஸ்ரேலிய தரப்பில் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும்…

  • இந்தோனேசியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ

    இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் கலிமந்தான் பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் நச்சுப் புகை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக உருவாகியுள்ள அபாயகரமான புகைமூட்டத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் சுவாச நோய்த்தொற்றுகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயிலிருந்து வெளியேறும் புகை மற்றும் புகைமூட்டம் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் காட்டுத்தீ வாரக்கணக்கில் தொடர்ந்து எரிந்து வருவதுடன்,…

  • நியூயோர்க் பாடசாலை மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை!

    நியூயோர்க் நகரப் பாடசாலைகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சுயமாக சிந்திக்கும் திறன், தனித்திறன்கள் மற்றும் மனநலனில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார். இந்தத் தடை அடுத்த ஓராண்டுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக…

  • சீன ஜனாதிபதி எகிப்து பயணம்

    மேற்காசிய பிராந்தியத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி சீ சின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்த சீ சின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வதேச அரங்கில் ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து செயல்பட…

  • குழந்தையின் டயப்பரில் தங்கத்தை கடத்திய தந்தை

    இந்தியாவின் கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர். கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆறு வயது குழந்தை, நான்கு வயது குழந்தை மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாஹ் விமான…

  • ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது

    ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த ‘ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில் நள்ளிரவில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அவர் திடீரென தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு மற்றும் எண்ணெய் டப்பாவை…

  • Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு

    இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை வலுப்படுத்தும் (SWYFT) திட்டத்தின்கீழ், முற்றிலும்…