Category: பிரதான செய்தி
-
வடக்கில் கைவிடப்பட்ட 82 பாடசாலைக் கட்டடங்களை முடிக்க வலியுறுத்தல்
வடமாகாணத்தில் பகுதியளவில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள 82 பாடசாலைக் கட்டடங்களையும் முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பல பாடசாலைக் கட்டடங்களே இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் உள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கட்டடங்களின் பணிகளைத் தொடர்வதற்கான தொழில்நுட்ப அறிக்கைகள் தற்போது திரட்டப்பட்டு…
-
விக்டோரியாவில் பேஸ்புக் விருந்து – 41 பேர் கைது
தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 41 பேரை கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா, ஹேஷ், ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள், சட்டவிரோத சிகரெட்டுகள், பியர் மற்றும் மதுபான போத்தல்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதுக்கும், பெண் சந்தேகநபர்கள் 22…
-
பலாலியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு
ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கார்க் தீவு அருகே பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானிய தனியார் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே,…
-
ஈரானுடனான மோதல் ‘சிறு விடயம்’ – ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலை “போர் அல்ல” என துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் தங்களுக்கு “சிறு விடயம்” என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தற்போது இடைவிட்டு இடம்பெறுவதாகவும், இதனை பலர் போர் என அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்க வரி…
-
அமைதிப் பேச்சுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத்…
-
சீனாவில் மண்சரிவு; ஒருவர் உயிரிழப்பு – 11 பேர் மாயம்
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
கச்சா எண்ணெய் திருட முயற்சி.. 37 பேர் உயிரிழந்த பயங்கரம்
நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு எண்ணெய் குழாயில், 200-க்கு மேற்பட்டோர் படகுகளில் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்தத்தில் கச்சா எண்ணெய் வெளியேறியபோது, அதிலிருந்து பரவிய நச்சுப் புகையை அங்கிருந்தவர்கள் சுவாசித்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுடன், சிலர் ஆற்றில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 37 உயிரிழந்திருப்பதாக…
-
தமிழக முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அஜித்-விஜய் ஆகிய இருவரை நிச்சயமாக சொல்ல முடியும். இவா்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றே சொல்லப்படுகிறது. தற்போது, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியுள்ள விஜய், அரசியலில் நுழைந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இப்படியான சூழலில், முதலமைச்சர் விஜயின் புதிய நடவடிக்கை ஒன்றை, நடிகர் அஜித்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழகத்தில்…
-
12ஆம் திகதி என்ன நடக்கப் போகிறது?
“என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் நேற்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி…