Category: பிரதான செய்தி

  • தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!

    தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஹரூஃப் – ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர். அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட…

  • கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

    கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார். செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது. மேலும்,…

  • ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி

    2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்”…

  • அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை

    யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார். சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர்…

  • ட்ரம்ப்–புதின் பேச்சில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசப்பட்டதாக தகவல்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செப்டம்பர் 8ம் தேதி சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். இதில் உக்ரைன் போர், அமெரிக்கா–ரஷ்யா உறவு, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் போர் கைதிகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு சென்றிருந்தனர். உக்ரைன் போரை…

  • ஒரு சொட்டு நீர் இல்லை? இலங்கையைப் பந்தாடும் எல்.நினோ.. 1,15,000 மக்கள் வேதனை!

    பிசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அடைவதைத்தான் எல்.நினோ என்று அழைக்கிறோம். இது பொதுவாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தாலும், இந்த ஆண்டு மிகக்கடுமையான அளவை எட்டியிருப்பதாக, வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருசில நாடுகளில் அதிகப்படியான வறட்சியையும், ஒரு சில நாடுகளில் அதிகப்படியான வெள்ளம், புயல் போன்ற சீற்றங்களையும், எல்.நினோ ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியா மாதிரியான நாடுகளில், வறட்சி மற்றும் வெள்ளம் இரண்டுமே மக்களை வாட்டி வதைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்,…

  • சிறுமியன் ஆசையை நிறைவேற்ற கோடிக்கணக்கில் செலவிட்ட அவரது மாமா

    அபுதாபியில் நடைபெற்ற Abu Dhabi International Hunting and Equestrian Exhibition (ADIHEX) 2026 நிகழ்ச்சியில், அரிய வகை கழுகான வெள்ளை ஃபால்கன் ஒன்று நடைபெற்ற ஏலத்தில் இடம்பெற்றது. துபாயைச் சேர்ந்த Sheikha Al Mansouri என்ற சிறுமி இந்த அரிய வெள்ளை ஃபால்கனைப் பார்த்து விரும்பியிருக்கிறார். சிறுமியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அவரது தாய்மாமா, ஏலத்தில் கலந்துகொண்டு வெறும் 5 நிமிடங்களுக்குள் அந்த ஃபால்கனை 1.5 மில்லியன் UAE திர்ஹாம்களுக்கு, இந்திய மதிப்பில் ரூ.3.85 கோடிக்கு…

  • Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடி தடை

    வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா மோசடி தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்க ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த ஊதியப் பிரிவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விண்ணப்பங்களை Cognizant நிறுவனம் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்…

  • நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா

    இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக்…

  • ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு

    ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன…