Category: பிரதான செய்தி

  • ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு

    ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன…

  • துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘கொண்ட ரஞ்சித்’ கைது

    டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும்…

  • நேபாள பெருவெள்ளம் – தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

    நேபாள பெருவெள்ளத்தின் 13ஆவது நாளான நேற்று (07) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,356 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர். இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போனவர்களைத் தேடும் பணியில் 20,000க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • அராலியில் கிணறுகள் பெருக்கெடுப்பால் பரபரப்பு!

    அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து…

  • ”Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு” – நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

    நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர், நிதின் கட்கரி. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு…

  • முதல்வர் விஜயின் சட்டப்பேரவை உரை.. கங்கனா ரனாவத் கேட்ட கேள்வி?

    பெண்களின் குணநலனை விமர்சிப்பது அவர்களை கீழே இறக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் பேசிய விஜய், பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார். இந்தச்சூழலில் தான்,…

  • இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களை சோதனை செய்யும் சீனா!

    சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘PLA டெய்லி’, ஆய்வகங்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இராணுவ பயன்பாட்டுக்கு விரைந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உலகளவில் உற்பத்தியாகும் மனிதவடிவ ரோபோக்களில் சுமார் 95 சதவீதத்தை சீன நிறுவனங்களே தயாரிக்கின்றன. இந்த வணிக ஆதிக்கத்தை இராணுவப் பயன்பாட்டிற்கும்…

  • தமிழக முதலமைச்சர் விஜய் உருவக்கேலி செய்தமை கண்டிக்கும் முக்கிய கட்சி

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் துறை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை இலக்காகக் கொண்டு குற்றச்சாட்டுகள்…

  • ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!

    செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் (St Petersburg) அமைந்துள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. அத்துடன், செப்டம்பர் 18-க்குள் தூதரகம் தன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜெர்மனி கடந்த வாரம் தனது நாட்டில் இருந்த இரண்டு ரஷ்ய தூதரகங்களை மூடியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. லீப்ஜிக் வானுார்தி நிலையத்தின் (Leipzig Airport) மீது நடத்தப்பட்ட தோல்வியுற்ற ஆளில்லா வானுார்தி தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம்…

  • கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!

    அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த ‘போம்பார்டியர்’ (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு ‘பிக்பேங்க்’ (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்று சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு…