Category: பிரதான செய்தி
-
அஜித்தின் பிரித்தானிய கார் பந்தயத்தை ஆரம்பித்துவைக்கும் விஜய்!
தமிழக முதலமைச்சர் விஜய் பிரித்தானியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட விஜய் டுபாய் சென்று அங்கிருந்து லண்டன் பயணிக்கிறார். நேற்று (10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி நாடு திரும்பவுள்ளது. அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர்…
-
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு ஆதரவளிப்பதில்லை என்று பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. அவருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பிலிப் தியாலோ (Philippe Diallo) அறிவித்துள்ளார். ஃபிஃபா தலைவரின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை உடைந்துவிட்டதாகவும் உலகக் கால்பந்தை நிர்வகிக்கும் விதம் தற்போதுள்ள முறையுடன் ஒத்துப்போகவில்லை என்றும் பிரான்ஸின் கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகக் குழு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது. முன்னதாக, உலக…
-
நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் – உயிரிழப்பு 1,377ஆக அதிகரிப்பு!
நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதுவரை சுமார் 13,656 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 5,130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளின்போது அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், டி.என்.ஏ பரிசோதனைகள் மூலம் அவற்றை அடையாளம் கண்டு…
-
அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான ‘பிக்எக்ஸ் மவுண்டன்’ பகுதியை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும்…
-
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (10) நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து அவர் இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-
AI Super Intelligence மனிதகுலத்தை அழிவுக்கு தள்ளும் அபாயம் குறித்து முன்னாள் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான Anthropic நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய 27 வயது ஏஐ ஆராய்ச்சியாளர் ஜேகப் காக்சன், தனது பதவியில் இருந்து விலகியிருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதவி விலகல் குறித்து சமூக வலைதளமான X-இல் பதிவிட்ட காக்சன், OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு நிறுவனங்களும் ஏஐ வளர்ச்சியில் பொறுப்புடன் செயல்படவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தான், OpenAI மற்றும் Anthropic ஆகிய இரு நிறுவனங்களிலும்…
-
நேபாளத்துக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. மீண்டும் உலுக்கிய இயற்கை!
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொன்ட பனிப்பாறை உருகி, 300 கி.மீ வேகத்தில் மினி சுனாமி போல் வந்த இந்த வெள்ளத்தில் சிக்கி, 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம்,…
-
மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு – கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதகமான இந்தச் செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கான நேர்மறையான முன்னெடுப்புகளாக இருப்பினும்,…
-
“இன்றைக்கும் தழும்புகள் இருக்கு…” : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!
மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதில் தனது தாடை என்பு உடைந்ததாகவும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்தச்…
-
சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!
நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, தாங்கள் பிரிவதாக ரவி மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனையடுத்து, இருவரையும் மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்…