Category: பிரதான செய்தி
-
டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’
டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இதே Aurus Senat காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர். பாரத் மண்டபம் வளாகத்திலேயே நடந்த இந்தப் பயணம், இரு நாடுகளின் நெருக்கத்தைக் காட்டும் காட்சியாகவும் பேசப்பட்டது. பொதுவாக ஒரு…
-
BRICS 2026: “கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்” – வெளிப்படையாக சொல்லும் சீனா!
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளைக் கையாண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா இணைந்து செயல்படும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங் (Xu Feihong) தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் 18-வது BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். இதனையொட்டி, பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.…
-
வலி. வடக்கு காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக நேற்று (11) 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பேணப்பட்டு…
-
உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் வான் பாதுகாப்பு உதவி – கனடா அறிவிப்பு
உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவியை கனடா அறிவித்துள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்கு பிறகு, உக்ரைனுக்கு 350 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உபகரண உதவி தொகுப்பு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தார். உக்ரைன் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Patriot Interceptors குறைவாக உள்ள நிலையில், ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து வரும் சூழலில் இந்த உதவி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.…
-
வேற்றுக்கிரகவாசிகள் உயிருடன் இருக்கின்றனவா? Secret-ஐ உடைத்த விஞ்ஞானிகள்!
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதா என்ற கேள்வி சமீபகாலமாக அதிகமாக எழுப்பப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு, பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான மிக வலுவான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, K2-18b என்ற வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற தகவல் கவனம் பெற்றது. அதேபோல், செவ்வாய்க் கிரகத்தில் NASA-வின் Perseverance ரோவர் ஆய்வு செய்த ‘Cheyava Falls‘ என்ற பாறையிலும், உயிரினங்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய சில அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக NASA தெரிவித்தது. ஆனால், பெரும்பாலான விஞ்ஞானிகள்…
-
விஜய் மீது வழக்கு போட சொன்னேன்.. திமுக ஏன் செய்யவில்லை! – திருமாவளவன் பேச்சு!
2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய விசிக, தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சர்பொறுப்பு ஏற்றது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து விசிக மீது திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். தேர்தலில் தோற்றதற்கு கூட்டணி கட்சிகளை குறைகூறி வருகின்றனர். இந்தசூழலில் கூட்டணியை உடைத்ததற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என குற்றஞ்சாட்டியிருக்கும் திருமாவளவன், கூட்டணி கட்சிகளின் நட்பை பேணத் தவறியது திமுக தான் என்றும், தவெகவை சரியாக கோணத்தில் அணுகவில்லை என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து…
-
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.. தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார். 2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. மத்திய அரசின் 4-வது உயரிய விருதான…
-
இஸ்ரேல்–லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்!
லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள பராஅச்சித் மலைப்பகுதியில் இஸ்ரேலியப் படையினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது. டயர் மாவட்டத்திலுள்ள பராஅச்சித் நகரின் மலைப்பகுதியில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், அதே பகுதியில் உள்ள வாடி அல்-ஹுஜைர் மீதும் இஸ்ரேலிய பீரங்கிப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் சூழலில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படையினரின்…
-
தெஹிவளை சம்பவம் – சந்தேகநபரின் முச்சக்கரவண்டி மீட்பு
தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார். இதற்காகச் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் விதம் அங்கிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது. சந்தேகநபர் வீட்டின் கதவைத் தட்டியதுடன், வீட்டிலுள்ளவர்கள்…
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார். இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல்…