Category: பிரதான செய்தி

  • தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த

    கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் ஆரம்பமாகியது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில்…

  • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

    வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின்…

  • ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். ”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம்…

  • யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி

    யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவர், அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகப் பேச்சினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்  வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: குறித்த மாணவி, கல்லூரியின் கழகச் செயற்பாடு ஒன்றுக்காகச் சென்று திரும்பியுள்ளார். அப்போது, விடுதிக்குப் பொறுப்பான பெண் விரிவுரையாளர், மாணவியைப் பார்த்து “எங்கு சென்று வருகிறாய்?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அம்மாணவி, “கழகச்…

  • விராட் கோலியின் டாட்டூக்களின் பின்னணியில் இருக்கும் அர்த்தங்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் உடலில் காணப்படும் டாட்டூக்கள் (பச்சை குத்தல்), அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் கிரிக்கெட் பயணத்தின் முக்கிய தருணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள விராட் கோலி, இந்திய விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார். அவரது ஆரம்பகால டாட்டூக்களில் ஒன்றாக வலது முன்கையில் வரையப்பட்ட பழங்குடியின கலை வடிவிலான டாட்டூ காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஸ்டைலுக்காக வரையப்பட்டதாகக் கூறப்பட்டாலும்,…

  • ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா.. ஓரங்கட்டப்படும் டாலர்?

    உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு மாற்றாக புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க BRICS முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் நாணயங்களில் நிதியுதவி வழங்குவதை அதிகரிக்க New Development Bank என்று சொல்லப்படும் NDB-யை BRICS தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…

  • “ஈழம் கேட்க மாட்டேன் – 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி” – மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!

    2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார். தனக்கு “கருநாக்கு” (சொல் பலிக்கும் வாக்கு) இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம்…

  • ரொபோக்களின் விநோத போராட்டம்

    செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர்,…

  • ட்ரோன் தாக்குதல் – முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி

    ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு – மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய்…

  • மிசோரம் மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு

    இந்தியாவின் மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் இன்று (12) அதிகாலை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். மிசோரம்–அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வைரேங்டே நகரில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவில் சிக்கிய சோடிங்லியானா என்ற 14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரது உடல் பொலிஸார் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த…