Author: Six Side Media
-
கனடா பிரதமர் மார்க் கார்னி ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கி
நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் திட்டங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் தோராயமாக €100 பில்லியன் ($116 பில்லியன்) நிதி திரட்ட இந்த வங்கி திட்டமிட்டுள்ளது. கனடாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த வங்கிக்கு இதுவரை சுமார் €5 பில்லியன் நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது. கனடாவுடன் இணைந்து அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாத்வியா,லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய ஒன்பது நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரிட்டன், ஜெர்மனி போன்ற பெரிய பொருளாதார நாடுகள் இன்னும் இதில் இணையவில்லை.…
-
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றத தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் பலநூற்றுக்கணக்கான தமிழ்…
-
உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில்…
-
நாசாவின் (NASA) நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி (Nancy Grace Roman Space Telescope) கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நாசாவின் (NASA) புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி (Nancy Grace Roman Space Telescope) புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தோராயமாக $4 பில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வுக்கூடம், ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) பல்கான் ஹெவி (Falcon Heavy) ராக்கெட் மூலம் சூரிய உதயத்திற்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து சுமார் 1 மில்லியன் மைல்கள் (1.6 மில்லியன் கி.மீ) தொலைவில்…
-
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு குறித்த உண்மையான காட்சிகளைச் சீனா தனது நாட்டில் ஒளிபரப்ப கட்டுப்பாடு
உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வைரலான நிலையில், சீனாவில் அது போன்ற வீடியோக்கள் எங்குமே ஒளிபரப்பப்படவில்லை. சீன அரசுக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் இதுகுறித்து மிகக் குறைந்த தகவல்களையே வெளியிட்டுள்ளன. திபெத் பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தாலும், காணாமல் போனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த எந்தவித நேரடித் தகவல்களும் அல்லது பிழைத்தவர்களின் பேட்டிகளும் அங்கு கிடைக்கவில்லை. அதிபர் ஜி ஜின்பிங் அவசரக் கூட்டத்தைக் கூட்டிக்…
-
வடக்கு சைப்ரஸ் கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு
வடக்கு சைப்ரஸ் (Northern Cyprus) கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் Ünal Üstel உறுதிப்படுத்தியுள்ளதாக BBC News செய்தி வெளியிட்டுள்ளது. கியிரீனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து 4 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த ‘Filo Jet’ என்ற பயணிகள் கப்பல், நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் மொத்தம் 267 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 237 பேர் மீட்கப்பட்டுள்ள…
-
திருச்சியில் இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ளமும், அதன் வரலாற்றுச் சுவடுகளும் குறித்து தெரிந்துகொள்ளலாம்..
காவிரிக் கரையின் தென்புறத்தில் அமைந்துள்ள திருச்சி இன்றளவும் வெள்ளச் சுவடுகளை தாங்கி நிற்கிறது என்பது நம்மில் பலரும் அறியாதது. திருச்சியும் காவிரி – கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் வரலாற்றுக் காலம் தொட்டே பல வெள்ளப் பெருக்குகளைச் சந்தித்துள்ளன. கி.பி.100 முதல் கி.பி 300க்கு இடைபட்ட காலத்தில் காவிரி வெள்ளத்தில் புதையுண்ட ஸ்ரீரங்கம் கோயிலை சோழ மன்னன் கிள்ளிவளவன் மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 10 முறை பெருவெள்ளத்தை எதிர்கொண்ட திருச்சியில்…
-
நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பணத்தை திருடிய மக்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பணப்பெட்டி ஒன்று ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த 92 லட்சம் நேபாள ரூபாய் பணத்தை பொதுமக்கள் எடுத்துத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணில் இருந்து தோண்டி எடுத்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் கும்பலை அந்நாட்டு காவல்துறை கைது செய்திருந்தது. இந்தச்சூழலில் தான், மற்றுமொரு திருட்டுச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நேபாளத்தின் ரசுவா…
-
சிறுவனின் வயிற்றில் இருந்த 48 பொருட்கள்!
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரித்திக் ரோஷன் (16) மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அவரது தாயார் சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி வருவதாக கூறி திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் தேதி கொண்டு சென்றுள்ளார். தனியார் மருத்துவமனை பொது அறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரபாண்டியன் உடனடியாக ரித்திக் ரோஷனை பரிசோதனை செய்ததுடன் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது இரைப்பையில் சந்தேகத்திற்குரிய கூர்மையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரது தாயாரிடம்…
-
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழப்பு
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள ரோசென்ஹீம் (Rosenheim) இரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 31 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு ரோசென்ஹீம் இரயில் நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பவேரிய காவல்துறை (Bavarian Police) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், 27…