Author: Six Side Media

  • விந்து தானம் மூலம் பிறந்த தம்பதியினர், தாங்கள் சகோதரர்களா என்பதை அறிய போராடியுள்ளனர்.

      பாரிஸில் விந்து தானம் மூலம் பிறந்த ஆர்தரும் ஆட்ரியும் 2010-ல் நடைபெற்ற செயல்பாட்டாளர்கள் சந்திப்பில் சந்தித்துக் காதலில் விழுந்தனர். ஆனால், பிரான்சில் அப்போது சில விந்து வங்கிகள் மட்டுமே இருந்ததால், அவர்கள் இருவரும் ஒரே தந்தையின் மூலம் பிறந்த அரை-உடன்பிறப்புகளாக (half-siblings) இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. பிரான்சில் மரபணு பரிசோதனை (Genetic testing) செய்வது மற்றும் வீடுகளில் பரிசோதனை செய்யும் கருவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் (3,500 யூரோக்களுக்கு மேல் அபராதம்). விந்து கொடையாளர்களின்…

  • ஐரோப்பிய யூனியனில் (EU) இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஐஸ்லாந்து நாட்டு மக்கள் வாக்களித்து முறியடித்துள்ளனர்

    பொது ஒளிபரப்பாளரான RUV வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்த வாக்குகளில் 52.8% பேர் அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆதரவாக 47.2% பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்; இரு தரப்புக்கும் இடையே சுமார் 12,600 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் ஒற்றை சந்தை மற்றும் ஷெங்கன் வலயத்தில் ஐஸ்லாந்து அங்கம் வகித்தாலும், யூனியனின் பொதுவான மீன்பிடி கொள்கையால் தங்கள் நாட்டின் மீன்பிடி உரிமைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும். மீன் மற்றும்…

  • சுவிட்சர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

    சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்தியவரைத் கைது செய்வதற்கு தேவையான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராவ் (Aarau) நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, காயமடைந்த 24 முதல் 27 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

  • ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதி லெனின் மொரேனோவுக்கு சிறை தண்டனை

    ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதி லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்றுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. லெனின் மொரேனோ, முன்னாள் ஜனாதிபதி ரப்பேல் கொரியாவின் ஆட்சிக்காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தபோது நடைபெற்ற இந்த இலஞ்சப் பரிமாற்றத்தில் நேரடியாக ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி, மகள், இரண்டு சகோதரர்கள் மற்றும்…

  • திபெத் மக்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சீன அரசு

    திபெத்தில் ஏற்கனவே இருந்த தடுப்பு ஏரிக்குக் கீழ்நோக்கிய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, புதிதாக மற்றொரு ஏரி உருவகியுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உருவான முந்தைய தடுப்பு ஏரி, கூடுதல் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், இயற்கை முறையிலேயே வற்றி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்காணிப்பு ட்ரோன் ஒன்று நேற்று(30) இந்த நிலச்சரிவை கண்டறிந்ததாகவும், அதன் இடிபாடுகள் ஆற்று நீரை மறித்து புதிய தடுப்பு ஏரியை…

  • இந்தியாவில் பிரசவ வலியில் கதறிய பெண் உயிரிழப்பு

    மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில், தனது முதல் குழந்தையைப் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே 25 வயதான கல்பனா மிஸ்ரா என்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது குடும்பத்தினரிடம் அழுது தன்னை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ள நிலையிலேயே இவ்வாறு பிரசவத்திற்கு பின்னர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த பெண்ணின் மரணம் தற்போது அப்பகுதி மக்களிடம் பெரும்…

  • யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்

    யாழ்ப்பாணம் – நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தி, வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது. இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ்…

  • கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – பிரதேச சபை அனுமதியின்றி அடாத்தாக அமைப்பு

    வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அக்காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம்…

  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

    ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக’ (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் நிறைவேற்றப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தினம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அந்த வகையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இம்முறை சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.…

  • அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தின

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்…