Author: Six Side Media

  • உஸ்பெகிஸ்தானுக்கு அரசு முறைப்பயணம் – வைரலாகும் இந்திய பிரதமரின் காணொளி

    உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, நான்கு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. தாஷ்கண்டில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார். இதன்போது,யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொளி பதிவு செய்து அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், ”நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள். அனைத்து வயதினரும் இந்த…

  • முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லை – வைகோ

    தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை…

  • ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – பதிலடி கொடுத்த ஈரான்

    ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும். ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்குப்…

  • வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்

    வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர்…

  • பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டென் பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 399.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 414.00). 95 ஒக்டென் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 475.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது…

  • ‘முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்’- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

    கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கேரள மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், பையன்னூர் தொகுதியின் தேர்தல் நிலவரம், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தற்போதைய ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். பொதுக்கூட்டத்தில் ​பினராயி விஜயன் பேசுகையில், “சி.பி.எம் தலைமையிலான  எல்.டி.எஃப் அரசு தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…

  • ஈழமுரசின் இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 31, 2026 திங்கள்

    பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி திரிதியை காலை 9.16 வரை பிறகு சதுர்த்தி நட்சத்திரம் ரேவதி யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் பூரம் சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள்.…

  • ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்

    ஈரானின் லராக் (Larak) தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று (30) தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஜூலை மாத இறுதிக்கு பின்னர் ஈரானிய நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தும் நேரடி இராணுவத் தாக்குதல் இதுவாகும். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை பொருத்துவதற்காக ஈரானியப் புரட்சிகர காவல்படை ஏவுகணைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்ததை அடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில்சில இராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் பலர்…

  • தீவிரமடையும் டெங்கு நோய்!

    நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை மேல் மாகாணத்தில் 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை இந்த ஆண்டு இதுவரை  72 டெங்கு…

  • இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு

    பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத்…