Author: Six Side Media
-
ஈரானுக்கு அமெரிக்கா புதிய எச்சரிக்கை? – மத்திய கிழக்கு நோக்கி புறப்பட்டது ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’!
ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் ஒரு வானூர்தி தாங்கி போர்க்கப்பலை அனுப்ப பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) கப்பல் உள்ளடங்கிய தாக்குதல் குழு அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 9,000 முதல் 10,000 இராணுவ வீரர்களைக் கொண்ட இத்தாக்குதல் குழு, எதிர்வரும் நவம்பர்…
-
கனடா அரசின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்ற AI – நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா அரசின் இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. கனடா அரசின் Library and Archives Canada என்ற இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயன்றதாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் Transluce தெரிவித்துள்ளது. இந்த முயற்சி மே 28 மற்றும் ஜூன் 9 ஆகிய திகதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. Transluce நிறுவனம், இந்த தாக்குதல் முறைகள் முன்னதாக OpenAI-க்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட சில செயல்பாடுகளுடன் ஒத்ததாக இருந்தாலும், நேரடியாக OpenAI-ஐ குற்றம்…
-
கனடா லொட்டரியில் ரூ.217 கோடி வென்ற பஞ்சாபி இளைஞர்
கனடா லொட்டரியில் பஞ்சாபி இளைஞர் ரூ.217 கோடி வென்றுள்ளார். கனடாவில் வசிக்கும் பஞ்சாபி இளைஞர் அம்ரித்பால் சிங், வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவுக்கு பெரிய லொட்டரி பரிசை வென்றுள்ளார். அவர் Lotto 6/49 Gold Ball டிராவில் 3.2 மில்லியன் கனேடிய டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.216-217 கோடி) பரிசை பெற்றுள்ளார். அம்ரித்பால், செப்டம்பர் 19, 2026 அன்று சர்ரே நகரில் டிக்கெட் வாங்கியிருந்தார். முதலில் அவர் டிக்கெட்டை சரிபார்த்தபோது, வெறும் 32,000 கனேடிய டொலர் தான்…
-
எங்கு பார்த்தாலும் பாம்புகள்… கனேடிய நகரமொன்றில் அதிகரித்துவரும் பிரச்சினை
ஒரு வகை பாம்புகள் நடமாட்டம், மனித்தோபா நகரமொன்றிற்கு பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. மனித்தோபா மாகாணத்திலுள்ள Eriksdale என்னும் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்கள். அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் சகஜம்தான் என்றாலும், கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் பாம்புகளாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள் அந்நகர மக்கள். Garter snakes என்னும் ஒரு வகை பாம்புகளின் நடமாட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் Eriksdale Curling Club என்னும் அமைப்பின் தலைவரான லாரி…
-
கனடாவில் தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கி சூடு
கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகையகம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்து நேற்று அதிகாலை வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தாக்கி, சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் எந்தவொரு பணியாளரும் அங்கு இருக்கவில்லை. இதன் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தவர்களை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு…
-
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிட அனுமதி உள்ளிட்ட சில குடிவரவு தொடர்பான கட்டணங்களை 20 மடங்கு வரை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை இன்றுமுதல்(01.11.2026) நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இதுவரை 10,000 யென் ஆக காணப்பட்ட நிரந்தர வதிவிட அனுமதிக்கான கட்டணம் 200,000 யென் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 6,000 யென் நிலையான கட்டணமாக அறவிடப்பட்டு வந்த விசா தொடர்பான கட்டணத்திற்குப் பதிலாக,…
-
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த டீசல் விலை – பரபரப்பில் ஐரோப்பிய ஒன்றிய மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள நாடுகளில் டீசல் லீட்டர் ஒன்றின் விலை சராசரி விலையை விட வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2.24 யூரோக்களாக (சுமார் 2.53 அமெரிக்க டொலர்கள்) விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ப் பதற்றங்களைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு…
-
அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்! துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்
கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பெரிய கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து…
-
பராமரிப்பு நிலையத்திற்குத் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சிறு பிள்ளை
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கியை வெளியே எடுத்த சிறு பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்தப் பிள்ளை தனது பையிலிருந்து துப்பாக்கியை வெளியே எடுத்தது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலைய ஊழியர்கள் உடனடியாக பிள்ளைகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ததாகக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். அந்தத் துப்பாக்கியில் தோட்டாக்களும் இருந்தன. அந்தச் சிறு பிள்ளையின் பெற்றோரில் மற்றொருவர் காவல்துறை அதிகாரி.நிலையத்தில் இருந்த துப்பாக்கி காவல்துறையைச் சேர்ந்தது அல்ல. சம்பவத்தில்…
-
துபாய் விமானப் பயணம் டிசம்பர் வரை ரத்து: SIA
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA) துபாய் – சிங்கப்பூர் இருவழி விமானப் பயணத்தை டிசம்பர் முதலாம் தேதி வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் அரசியல் பதற்றம் நீடிப்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியது. சிங்கப்பூரிலிருந்து துபாய் செல்லும் SQ494, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் SQ495 ஆகிய இரு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமை தொடர்ந்து மாறுவதால் நிறுவனத்தின் மற்ற விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று அது சொன்னது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்படாத விமானச் சீட்டுக்கான…