Author: Six Side Media
-
சர்வதேச சந்தையில் டீசல் தட்டுப்பாடு – அமெரிக்காவின் அதிரடி முடிவால் உச்சமடையும் எரிபொருள் விலை!
சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் கையிருப்பில் உள்ள அவசரகால டீசல் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க விவசாயிகள், சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக…
-
மாநில நெடுஞ்சாலை பலகையில் இந்தி! இரவோடு இரவாக மறைக்கப்பட்ட எழுத்துகள்!அதிகாரிகள் பணிநீக்கம்!
தமிழ்நாட்டில்.. குறிப்பாக அரசு அமைக்கும் வழிகாட்டிப் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் இடம்பெறுவது வழக்கம்.. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வழிகள் மற்றும் தொலைவு விவரங்கள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக…
-
Sigma: “சின்ன பையன் சஞ்சய் இப்போ இயக்குநர் ஆகிட்டார்” – ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா & ஜோதிகா
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் ‘சிக்மா’ படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கும், ஜேசன் சஞ்சய்யின் அறிமுகத்திற்கும் வாழ்த்து தெரிவித்து சூர்யாவும், ஜோதிகாவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய்யை வாழ்த்திய ஜோதிகா, “அன்புள்ள ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினருக்கு, ‘சிக்மா’ திரைப்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பட விளம்பரங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு…
-
தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? – வெளியுறவுத் துறை விளக்கம்
ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார். இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷோட்டா மூசாயேவ் கூறியிருந்தார். தற்போது ஸ்மித் மச்சார் எப்படி இருக்கிறார் என்பதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். அந்த அறிக்கையில், “இந்தியக் குடிமகனும், ‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானத்தின்…
-
இராணுவ விதியை மீறிய பிரபல கே-பாப் கலைஞர்: சியோல் நீதிமன்றம் அளித்த அதிரடித் தீர்ப்பு!
தென் கொரியாவின் பிரபல WINNER K-pop இசைக்குழுவின் உறுப்பினரான MINO-வுக்கு, நாட்டின் கட்டாய இராணுவ சேவைச் சட்டத்தை மீறிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியச் சட்டப்படி, குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் அனைவரும் கட்டாயமாக இராணுவ சேவை ஆற்றுவது அவசியமாகும். இந்த நிலையில், இராணுவப் பணியில் ஈடுப்பட்டிருந்த MINO, எந்த வித உரிய தகவலும் இன்றி தொடர்ந்து 102 நாட்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு…
-
23 நிமிடங்களில் வானத்தையே வண்ணமயமாக்கிய அதிசயம்: ஹாங்காங் விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்ட வானவேடிக்கை!
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 77ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஹாங்காங்கின் புகழ்பெற்ற விக்டோரியா துறைமுகத்தில் பிரம்மாண்டமான தேசிய தின வானவேடிக்கை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 23 நிமிடங்கள் நீடித்த இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன வானவேடிக்கைப் பொருட்கள் விண்ணில் செலுத்தப்பட்டன . இவை துறைமுகத்தின் இரு கரைகளையும், வானத்தையும் பல்வேறு வண்ணங்களால் அலங்கரித்துள்ளன. இந்தக் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியைக் நேரில் கண்டுகளிப்பதற்காக, சுமார் 3 இலட்சத்து…
-
இன்றைய ராசிபலன் – அக்டோபர் 2, 2026 வெள்ளி
பஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி சஷ்டி பகல் 12.07 வரை பிறகு சப்தமி நட்சத்திரம் ரோகிணி காலை 7.23 வரை பிறகு மிருகசீரிடம் யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரை சந்திராஷ்டமம் சுவாதி காலை 7.23 வரை பிறகு விசாகம் சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் மேஷம்…
-
ஹோர்முஸ் நீரிணை வழியே 2.5 மில்லியன் பீப்பாய்களுடன் பயணித்த மசகு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஓமான் கடற்பரப்பிற்கு அருகே, 2.5 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற பிரமாண்ட கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கப்பல் தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியே, அனுமதிக்கப்படாத பாதையில் இந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த மேலதிக விவரங்கள் உத்தியோகபூர்வமாக…
-
ஈரானுக்கு அமெரிக்கா புதிய எச்சரிக்கை? – மத்திய கிழக்கு நோக்கி புறப்பட்டது ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’!
ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் ஒரு வானூர்தி தாங்கி போர்க்கப்பலை அனுப்ப பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) கப்பல் உள்ளடங்கிய தாக்குதல் குழு அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 9,000 முதல் 10,000 இராணுவ வீரர்களைக் கொண்ட இத்தாக்குதல் குழு, எதிர்வரும் நவம்பர்…
-
கனடா அரசின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்ற AI – நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா அரசின் இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. கனடா அரசின் Library and Archives Canada என்ற இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயன்றதாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் Transluce தெரிவித்துள்ளது. இந்த முயற்சி மே 28 மற்றும் ஜூன் 9 ஆகிய திகதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. Transluce நிறுவனம், இந்த தாக்குதல் முறைகள் முன்னதாக OpenAI-க்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட சில செயல்பாடுகளுடன் ஒத்ததாக இருந்தாலும், நேரடியாக OpenAI-ஐ குற்றம்…