Author: Six Side Media

  • சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி, போராட்டமொன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நேற்று (20) இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான்கானை விடுவிக்குமாறு அலீமா கான் தொடர்ந்து போராடி வருவதோடு, பல தரப்புகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இம்ரான்கானின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் பொது ஒழுங்கு…

  • 06 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த முதலை பிடிக்கப்பட்டது – இந்தியாவில் சம்பவம்

    இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு அருகே கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை  திங்கட்கிழமை (21) வனத்துறையினர் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு  கோதையாற்றில்  கடந்த 06 ஆண்டுகளாக முதலை நடமாட்டம் இருந்து வந்ததுள்ளது. தொடர்ந்து முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்ததோடு  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில்,…

  • மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்… 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்!

    இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான ஒருவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் சிகிச்சை இன்றி 271 நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல… 271 நாட்கள் கழித்து, தற்போது வெற்றிகரமாக மனித உறுப்பை பெற்றுவிட்டார் அவர். மனித உறுப்பு கிடைக்கும் வரை, தற்காலிகமாகவே அவர் இந்த பன்றி உறுப்பை பெற்றிருந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மனித உறுப்பு தானமாக கிடைக்கும்…

  • ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: விளாடிமிர் புதின் கட்சி அமோக வெற்றி…

    ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ கட்சி 355 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தாலும், யாரும் கணிக்க முடியாத அளவுக்கு ரஷ்ய அரசியலில் புதினின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையான ‘ஸ்டேட் டுமா’ (State Duma) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. உக்ரைன் போருக்குப் பிந்தைய…

  • படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

    பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று சிங்கப்பூர் நீரிணையில் மீன்பிடிப் படகொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக் கப்பல் மோதியதில் மீன்பிடிப் படகிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • ஜனாதிபதியை சந்தித்த அனோஜனின் குடும்பத்தினர்

    அனோஜனின் சகோதரர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். ஜனாதிபதியை சந்தித்து தனது அண்ணனின் விடுதலை குறித்து கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றப்போவதாகவும் அனோஜனின் தம்பி தெரிவித்தார். மேலும், ஜனாதிபதியை சந்திக்கக் கிடைத்ததற்கும் இந்த  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

  • ஜப்பானை உலுக்குகிறது துஜுவான்’ புயல் – 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வெளியேற்ற உத்தரவு!

    ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களை ‘துஜுவான்’ (Dujuan) எனப்படும் பேரழிவுச் சூறாவளி தாக்கி வருவதால், வரலாறு காணாத பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புயலின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, 6 மாகாணங்களைச் சேர்ந்த 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 50,000க்கும் அதிகமான வீடுகள் மின்சார வசதியை இழந்துள்ளன. கனகாவா மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண்…

  • கனடாவில் விமானப் பயிற்சியின் போது விபத்து: இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

    இந்தியாவின்  தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ரெஜினாவில் இருந்து கார்லைல் வழியாக ஸ்டெய்ன்பாக், மனிடோபா வரை இரவு நேர பயிற்சியை மேற்கொண்ட போது சஸ்காட்சுவான் அருகே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில்  பயணம் செய்த இருவரும்  உயிரிழந்துள்ளனர். உயிரிழந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச்…

  • இரட்டைத் தலைகளுடன் பொரித்த அரிய ஆமைக்குஞ்சு

    அமெரிக்காவின் கேப் கோட் பகுதியில் அமைந்துள்ள சரணாலயத்தில் இரட்டைத் தலைகளுடன் கூடிய ஆமைக்குஞ்சு ஒன்று பொரித்துள்ளது. இரட்டையர்களாக உருவாக வேண்டிய கரு முழுமையாகப் பிரியாமல், ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் உருவாகும் அரிய நிலை ‘Bicephaly’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய உடலமைப்பு மிகவும் அரிதாகவே காணப்படும் நிலையில், கேப் கோட் சரணாலயத்தில் பொறித்துள்ள இந்த ஆமைக்குஞ்சு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கத்திற்கு மாறான உடலமைப்புடன் காணப்படும் இந்த ஆமைக்குஞ்சை சரணாலயப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத்…

  • இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!

    இலங்கையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் புலமைச் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், திருமணம், களியாட்டங்கள், நிறுவன நிகழ்வுகள், DJ நிகழ்ச்சிகள், அத்துடன் வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்களில் இசை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்கி புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த விதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 20,000…