Author: Six Side Media

  • இரட்டைத் தலைகளுடன் பொரித்த அரிய ஆமைக்குஞ்சு

    அமெரிக்காவின் கேப் கோட் பகுதியில் அமைந்துள்ள சரணாலயத்தில் இரட்டைத் தலைகளுடன் கூடிய ஆமைக்குஞ்சு ஒன்று பொரித்துள்ளது. இரட்டையர்களாக உருவாக வேண்டிய கரு முழுமையாகப் பிரியாமல், ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் உருவாகும் அரிய நிலை ‘Bicephaly’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய உடலமைப்பு மிகவும் அரிதாகவே காணப்படும் நிலையில், கேப் கோட் சரணாலயத்தில் பொறித்துள்ள இந்த ஆமைக்குஞ்சு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கத்திற்கு மாறான உடலமைப்புடன் காணப்படும் இந்த ஆமைக்குஞ்சை சரணாலயப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத்…

  • இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!

    இலங்கையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் புலமைச் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், திருமணம், களியாட்டங்கள், நிறுவன நிகழ்வுகள், DJ நிகழ்ச்சிகள், அத்துடன் வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்களில் இசை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் பெறுவதைக் கட்டாயமாக்கி புதிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த விதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 20,000…

  • இத்தாலி பாடசாலைகளில் பர்தா, நிகாப் அணிய தடை?

    வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது மற்றும் பாடசாலைகளில் பர்தா மற்றும் நிகாப் ஆகியவற்றை அணிவதை தடை செய்வது தொடர்பான நடவடிக்கையை விரைவில் தனது அரசாங்கத்தால் அறிமுகம் செய்யவுள்ளதாக இத்தாலிய பிரதமர் ஜிர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். “பாடசாலை அமைப்பில் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும்” வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு இத்தாலிய மொழி பாடங்களை கட்டாயமாக்கும் அம்சமும் இந்த நடவடிக்கையில் அடங்கும் என்று, தனது தேசியவாத-பழமைவாத கட்சியான ‘பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’யின் (Brothers of Italy) இளைஞர் அணியினரிடம்…

  • சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு விஜயம்!

    சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, சீனா–அமெரிக்கா உறவுகள் மற்றும் உலக அமைதி, அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்புடன் ஷி ஜின்பிங் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வழக்கமான செய்தியாளர்…

  • அமெரிக்க MQ-1 ட்ரோனை வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு

    ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே அமெரிக்காவின் MQ-1 ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா MQ-1 ட்ரோன்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கியிருந்தாலும், மிகவும் மேம்பட்ட MQ-9 ரக ட்ரோன்களைப் பெருமளவில் இழந்ததைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக IRGC கூறியது. இந்த இரண்டு ரக ட்ரோன்களும் IRGC-யின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பால் தீவிரமாக வேட்டையாடப்பட்டு…

  • ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டின் கட்சி முன்னிலை!

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான ஐக்கிய ரஷ்ய கட்சி முன்னிலை வகித்து வருகிறது. செப்டம்பர் 18 முதல் 20 வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில், ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழவையில் உள்ள 450 இடங்களுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்றது. ரஷ்ய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இந்தத் தேர்தலில் 56.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், இதுவரை ஐக்கிய ரஷ்ய கட்சி 58 சதவீத…

  • உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் புதிய திருப்புமுனை – 10 எம்.பிக்கள் மீது விசாரணை!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும்…

  • ‘துவா’வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

    பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி கர்ப்பம் குறித்த செய்தியை அந்தத் தம்பதியினர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அதில் அவர்களின் மகள் , கர்ப்பம் உறுதியானதைக் காட்டும் பரிசோதனைக் கருவியை (pregnancy kit) கையில் வைத்திருந்தார். பிரசவ தேதிக்கு முன்னதாக, தங்கள் வாழ்க்கையின் இந்தச்…

  • அமெரிக்கா செல்லும் ஈரான் அதிபர்

    இன்னும் ஆறு நாட்களில் ஈரான் போர் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிடும். ஆனால், இந்தப் போரின் முடிவு குறித்த எந்த நேர்மறையான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் செல்வது இதுவே முதல்முறை. ஏன்… ஈரானின் அரசியல் பிரதிநிதியே அமெரிக்காவிற்குச் செல்வது இது முதல்முறை. இந்த நேரத்தில், ஃபாக்ஸ்…

  • உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார்.

    2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும் அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை பொருளாதாரத் தடை போன்ற நெருக்கடிகளை ரஷ்யாவிற்குக் கொடுத்தும் இந்தப் போர் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் கூட, இந்தப் போரை நிறுத்த ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்கா ‘ரஷ்ய தடைச் சட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். “நான் அதிபர் ட்ரம்பிடம் பேசினேன். இது ஒரு…