Author: Six Side Media
-
உகாண்டா அரசர் ஓயோ நியம்பா காலமானார்!
ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார். இவர் தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல் அதிகாரம்…
-
இந்தியா,கனடா இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்
இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்’ குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க இந்தியாவும் கனடாவும் விரும்புவதாக இருநாட்டு நிதி அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இருதரப்புப் பொருளாதார மற்றும் நிதிசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம்’ (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 8 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது…
-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை விரிவுபடுத்தி வருவதாக செய்திகள்
கட்டார் நாட்டுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலம், பாகிஸ்தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் கட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா அல்-சலேம் அல்-சபா ஆகியோரிடையே ராவல்பிண்டியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கட்டார் ராணுவத்திற்குப் பயிற்சி அளித்தல், அதன் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் எல்லை மேலாண்மையில் உதவுதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.…
-
திருமாவளவன் என் அரசியல் ஆசான் – சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை உடன்பிறப்புகளால் அந்தக்கட்சி எதிர்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று சட்டசபையில் விசிக தலைவர் திருமாவளவன் என்னுடைய ஆசான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது, “எங்கள் தலைவருக்கும், அண்ணன் தொல்.திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறுமனே தேர்தல் உடன்பாடு, தேர்தல் கூட்டணி கிடையாது. இது கொள்கை கூட்டணி. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் எனில், என்னுடைய அரசியல் ஆசான் என்றால்…
-
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
கடந்த இரு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74,000 ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 25 ஆயிரத்து 310 ஆகும். அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது.…
-
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89ஆவது வயதில் காலமானார். அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் – 24 மணி நேர சிகிச்சை தேவை…! ஈரான் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது. அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார்…
-
நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும்…
-
நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானில், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானோர் நூறு வயதைக் கடந்து வாழ்வதற்கு இவர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவம் என்பன காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், அவர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் இயக்கம், சமூக உறவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை இதில் எந்த…
-
நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்
நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.37 மணியளவில், நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள். அப்படி மாயமானவர்களில், தவல்,…