Author: Six Side Media

  • நேபாளத்தில் பலி எண்ணிக்கை 579ஆக உயர்வு.

    நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் – திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள்…

  • கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள்

    நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகள் போன்ற பேரிடர்களின்போது சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் சென்றடைவதற்கு முன்பாகவே அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில், ‘சைபோர்க்’ கரப்பான் பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக Advanced Science அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ‘பாராபோர்க்ஸ்’ (Paraborgs) என அழைக்கப்படும் இந்தக் கரப்பான் பூச்சிகளின் உடலில் சிறிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.…

  • ஒன்றாக சாப்பிட்டால் மனச்சோர்வு நீங்கும் : ஆய்வில் தகவல்

    உணவைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் (Commensality) மன அழுத்தம் மற்றும் டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனியாக சாப்பிடுபவர்களை விட, மற்றவர்களுடன் இணைந்து சாப்பிடுபவர்களுக்கு மனச்சோர்வு (depression) ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று சீன மற்றும் ஜப்பானிய ஆய்வுகள் காட்டுகின்றன. உலக மகிழ்ச்சி அறிக்கையின் (World Happiness Report) படியும், அதிகமான வேளைகளில் உணவைப் பகிர்ந்துகொள்பவர்கள் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். 2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்…

  • ’ஆபிரகாம் லிங்கனை விட நானே சிறந்த அதிபர்..’ TOP LIST தரவரிசையை வெளியிட்ட ட்ரம்ப்!

    ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டனை விட தானே அமெரிக்காவின் சிறந்த அதிபர் என டொனால்ட் ட்ரம்ப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் அதிபர்கள் புகைப்படங்களுடன் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ட்ரம்ப், லிங்கன், வாஷிங்டன் போன்ற வரலாற்றுத் தலைவர்களை ‘சிறந்தவர்கள்’ என பட்டியலிட்டுள்ளார். ஒபாமா, ஜோ பைடன் ஆகியோரை ‘தோல்வியடைந்தவர்கள்’ என வரிசைப்படுத்தி உள்ளார். முன்னாள் அதிபர்களான ரீகன், கென்னடி போன்ற பல முக்கியத் தலைவர்களின் பெயர்களைப் பட்டியலில் புறக்கணித்துவிட்டு…

  • சோனியாவின் சுயசரிதையை இந்தியாவில் வெளியிடவில்லை – பென்குயின் ரேண்டம் ஹவுஸ் விளக்கம்

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, இத்தாலியில் தனது குழந்தைப் பருவம், கல்லூரி வாழ்க்கை, முன்னாள் ராஜீவ் காந்தி உடனான காதல் திருமணம், இதைத் தொடர்ந்து ராஜீவ்-ன் படுகொலை. இதனால், அவர் பொதுவாழ்க்கை வந்தது என அவர் வாழ்க்கை கடந்து வந்த சம்பவங்கள் குறித்து “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நூலின் சில பகுதிகளில் மாற்றங்கள்…

  • அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி.. அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஒகஸ்ட் 21ஆம் திகதி அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. 22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவை வழக்கின் தேக்கநிலையைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுமே கொண்டுவரப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

  • சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை

    சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன்…

  • வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

    வெனிசுவேலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்தில் பெரும்பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலையை குறைப்பதே நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வெனிசுவேலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  • கொழும்பு துறைமுகத்தின் பாரிய வளர்ச்சி

    2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் 11.9 சதவீத வளர்ச்சியை கொழும்பு துறைமுகம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு துறைமுகம் (Port of Colombo) உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அல்பலீனர் என்ற தரவுத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4,444,034 இருபது அடி சமமான அலகுகளை கையாண்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 3,972,053…

  • அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்- கனடாவே அதிகம் பாதிக்கப்படும்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது. ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும்…