Category: முக்கிய செய்தி

  • அமெரிக்கா – ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

    அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்த வியாழக்கிழமை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்த பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய், தற்போது 92 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது. இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 85 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

  • தெற்கு சீனாவில் ‘நௌல்’ சூறாவளி கனமழை – 10 பேர் உயிரிழப்பு

    தெற்கு சீன மாகாணமான குவாங்டாங்கில் சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12ஆவது மற்றும் மிக வலிமையான சூறாவளியான இதுவாகும். குவாங்டொங் மாகாணத்தின் ஹுய்சோ நகரில் நேற்று (26) அதிகாலை 3:50 மணியளவில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் கரையைக் கடந்துள்ளது. இதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டொங் மாகாணத்தில் மட்டும் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், அதிவேக ரயில் சேவைகள்…

  • காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்

    வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை முன்னெடுத்து வருவதாகவும், தாங்கள் நீண்டகாலமாக நிலமும், வீடும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில்,…

  • ‘கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்

    மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் ‘கண்ணிருந்தும் குருடர்களாக’ உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ளன என்று கேட்பவர்கள் நேரில் வந்து பார்வையிடுமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் இன்று (27) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மலையக இளைஞர்களை தொழில் உலகிற்கு தயார்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் முழு நிதி ஒதுக்கீட்டில் இயங்கும்…

  • நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை தீவிரம்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…

  • கனடாவில் மீளப்பெறப்படும் பிரபல சாக்லேட்

    கனடாவில் பிரபல சாக்லேட் நிறுவனமான கேட்பரியின் ‘டெய்ரி மில்க் ஓரியோ’ (Dairy Milk Oreo) சாக்லேட் பார்கள் நாடு தழுவிய அளவில் சந்தையிலிருந்து அவசரமாக மீளப்பெறப்படுகின்றன. இந்த சாக்லேட் தயாரிப்பில் ‘பிஸ்தா’  பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பது அதன் லேபிளில்  குறிப்பிடப்படவில்லை. பிஸ்தா அல்லது மரக் கொட்டைகள் (Tree Nuts) ஒவ்வாமை (Allergy) உள்ளவர்களுக்கு இது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாக்லேட்டைச் சாப்பிட்டதால் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப்…

  • டிரம்பின் 50% வரி விதிப்பு : ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!

    அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா பொருட்களுக்கு விதித்துள்ள 50% கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ளப் பொறுமையுடனும், அரசுதந்திர  ரீதியிலும் செயல்பட வேண்டும் என்று ஆல்பர்ட்டா மாகாண பிரதமர் டேனியல் ஸ்மித்  தெரிவித்துள்ளார். கனடா உடனடியாகப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதை விட, அமெரிக்கர்களுடனான பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதே சிறந்தது என்பது அவரது நிலைப்பாடாகும். பேச்சுவார்த்தைக்குச் செல்லும் முன்பே எதிரியைத் தாக்குவது போல் செயல்படாமல்,அமைதியான முறையில் அரசுதந்திரத்தைப் பயன்படுத்தி 100% வரி இல்லாத வர்த்தக உறவை…

  • கனேடியர் ஒருவரால் இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பு; சோதனையில் அதிர்ச்சி திருப்பம்

    கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு

    நுவரெலியா பிரதான நகரில் சில சமாதான நீதவான்கள், சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வரும் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகத்திற்கு இலவச சேவையாற்றும் நோக்கில் வழங்கப்படும் சமாதான நீதவான் பதவி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற நபர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பிரமாணப்பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இலவசமாக அத்தாட்சிப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே நீதி அமைச்சினால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கிராமிய…

  • இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தக் காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 61 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 47,670 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…