Category: முக்கிய செய்தி

  • அம்பாறையில் ‘குடு அசங்க’ கைது

    அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘குடு அசங்க’ என்றழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியின் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘குடு அசங்க’ இரகசியமாக போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட…

  • குஜராத் வெள்ளத்தில் தத்தளித்த 57 பேரை ராணுவம் மீட்டது

    குஜராத் மாநில வெள்ளத்தில் சிக்கிய 57 பேரை இந்திய ராணுவ வீரர்கள் சனிக்கிழமை (ஜூலை 25) மீட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நவசாரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த அவர்களை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அகமதாபாத், சூரத், அம்ரிலி, வல்சாத், நவசாரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்ததால்…

  • ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களின் சேர்க்கை ரத்து

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் இணையவிருந்த 502 மாணவர்களின் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக இந்தத் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முதலே இது தொடர்பான அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும், உரிய காலக்கெடுவுக்குள் சேர்க்கைக் கட்டணத்தையும் நிதிக்கடப்பாடுகளையும் நிறைவு…

  • ஜெர்மனியில் மக்கள் பேரணி மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி

    ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை (ஜூலை 25, 2026) அன்று இரவு நடந்த ‘பிரைட் பேரணி’ (Pride Parade) மக்கள் கூட்டத்திற்குள் வெள்ளை நிற வேன் ஒன்று புகுந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பெர்லின் நகரின் மையப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற டியர்கார்டன் பூங்கா (Tiergarten park) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘கிரிஸ்டபர் ஸ்திரீட் டே பரேட்’ (Christopher Street Day parade) பேரணியில்…

  • உபாலி தர்மதாச காலமானார்

    ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான உபாலி தர்மதாச காலமானார். அவர் 1996 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக பணியாற்றினார். அதற்கு முன்னர், 1993 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் மூவர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவிலும் அவர் அண்மையில் அங்கத்துவம்பெற்றிருந்தார். இலங்கையின் முன்னணி நிறுவனமான நவலோகா குழுமத்தின்  இணைப்…

  • வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!

    வங்கக்கடலில் 36 நாட்களாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் (தந்தை மற்றும் மகன்) பங்களாதேஷ் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சோனாச்சர் (Sonarchar) அருகே வங்காள விரிகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஃபைபர் படகில் இருந்த இருவரையும், பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் குழு கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவதானித்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக குறித்த இருவரையும் தங்களது படகுக்கு மாற்றிய அவர்கள், பங்களாதேஷின் மொஹேஷ்காலி கரைக்கு அழைத்து வந்தனர். மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த…

  • ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக விளக்கமளித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றாக நிராகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில், ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், அவற்றில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகத் தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  உத்தியோகபூர்வ செயல்பாட்டுத் தேவைகளுக்காகப் பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதி ஊடகப் பிரிவின்…

  • அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவரானார் வோல்கர் டர்க்

    ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவைச் சேர்ந்த வழக்கறிஞரான வோல்கர் டர்க் உள்ளார். இவருடைய பதவிக் காலம், வரும், அக்.இ 11ல் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் ஐ.நா சபையில் நேற்று நடந்தது. ஐ.நா. பொதுச் செயலர் அன்டனியோ குட்டரெஸ், அவரை…

  • போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்; கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு…

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந் தேதி நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று கூறியிருந்தார். ஆனால்இ இந்த கருத்தை நையாண்டி செய்யும் விதமாக பலர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இந்த கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக…

  • பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பெல்லன்வில பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.