Category: முக்கிய செய்தி
-
சுரேஷ் சலேவின் ரிட் மனு நாளை மீண்டும் பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைப் பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்த ரிட் மனுவை நாளை (28) மீண்டும் அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்றைய தினம் (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த…
-
இங்கிலாந்து அரசு – 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!
இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர்…
-
கிழக்கு நேபாளத்தில் வன்முறை-ஒருவர் உயிரிழப்பு
கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ் மேத்தா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இன்று (27) காலை 7 மணி முதல் அப்பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், மறுஉத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு தொடருமென…
-
ஹோர்முஸ் நீரிணை – ஈரான் ஓமன் இடையே பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவ மோதல்களுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சர்வதேச கடல்வழிப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பேச்சுவார்த்தை முற்றிலும் ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம் என்றும், இதில்…
-
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (27) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்…
-
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவத்தில்…
-
LPL ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: ஜஃப்னா கிங்ஸ் அணி இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் உள்ளட்ட இரு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (27) நிராகரித்துள்ளார். கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார். தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால்…
-
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள், ‘ஹீனட்டியன சுபுன்’ எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, ‘களு மல்லி’ எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் ‘பபா’ எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
நாட்டில் தற்போது ‘எல் நினோ’ (El-Nino) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். இது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக மாறுவதற்கு முன்னர் 63% ஆக இருந்த சாத்தியக்கூறு, உலகளாவிய கணிப்புகளின்படி தற்போது 80% ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வாறு மிகவும் தீவிரமான எல் நினோ நிலைமை ஏற்படுமாயின், எதிர்வரும் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாட்டில் வறட்சி நிலைமை ஏற்படக்கூடும் என்றும் அவர்…
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
அமெரிக்க நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சியாட்டில் நகரில் உள்ள ஸ்பேஸ் நீடில் அருகே உள்ள அரங்கு ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இதில் இரண்டு பேர் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம்…