Category: முக்கிய செய்தி
-
கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி
கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும்…
-
தோல்வியடைந்த ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள்
உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன்…
-
மதுவை விட்டு விலகும் தாய்லந்து மக்கள்
தாய்லந்தில் மில்லியன் கணக்கானோர் மூன்று மாதங்களுக்கு மதுபானம் அருந்துவதை நிறுத்துவதாகச் சபதம் எடுத்துள்ளனர். சாமுட் சக்கோன் (Samut Sakhon) வட்டாரத்தின் பௌத்த ஆலயம் ஒன்றில் மக்கள் கூடி சபதம் எடுத்தனர். கௌ ஃபான்ஸா (Khao Phansa) எனப்படும் பெளத்த தினத்தில் இந்த மது அருந்தா இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. வாசானா நாக் உம்மா (Wassana Nak-umma) என்ற பெண் மூவாண்டாக அந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு வயது 42. இல்லத்தரசியான அவர் அதிகமாக மது அருந்தினார்.…
-
பிரான்சில் காட்டுத்தீயால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்
பிரான்சில் போர்டோ (Bordeaux) நகருக்கு அருகே ஏற்பட்ட பெரிய காட்டுத்தீயில் இரண்டாம் உலகப் போர்க்காலத்து வெடிகுண்டுகளும் வெடிமருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுமார் 180 வீடுகள் தீக்கு இரையாயின. தீயின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாய் அதிகாரிகள் கூறினர். எரிவாயுக் கலன் வெடித்திருக்கக்கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது வெடிமருந்தாக இருக்கலாம் என்று தீயணைப்புப் படைத் தளபதி தாமஸ் மிமியாக் பின்னர் கூறினார். ஜெர்மனி, பிரான்சைச் சேர்ந்த வெடிபொருள்கள் போர்க்காலத்தில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று மிமியாக் சொன்னார். கோடைக்காலம்…
-
கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்
காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார். Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். ட்ரம்ப், கடந்த…
-
கொழும்பில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு முறிடிப்பு
கொழும்பு தெஹிவளை, கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க மைதானம் அருகே ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இரவு சுமார் 08.10 மணியளவில், முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயன்றார். மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பேக்கரியின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் துப்பாக்கி வெடிக்கவில்லை. இந்த நிலையில் பேக்கரி…
-
ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் காட்டம்
ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்! அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில், தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,ஈரானின் தலைவர்கள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பொதுவெளியில் தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறுகின்றனர். அதுமட்டுமன்றி…
-
யாழில் தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு உட்பட்ட நடத்துனர் ஒருவர் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுக்கு முழு ஆளிற்கான பணம் அறவீடு செய்ததற்காக ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற 10 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து சங்கத்தினதும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினதும் கட்டுப்பாட்டை மீறி வயது வந்தோர்களுக்கான முழுத் தொகை பணம் அறவிட்டதற்காக குறித்த…
-
ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான், ஓமான் விரைவில் ஒப்பந்தம்
ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ திங்களன்று செய்தி வெளியிட்டது. சாத்தியமான ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் அதன் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கப்பல் வழித்தடத்தின் வழியாகப் பயணிக்கும், அதே நேரத்தில் வெளியே செல்லும் கப்பல்கள் ஓமானுக்கு அருகிலுள்ள ஒரு வழித்தடத்தைப் பயன்படுத்தும் என அந்த அந்த…
-
உலக சாதனை படைத்த இளைஞர்
18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1717ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியராக பணியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இருந்த சாதனை 306 ஆண்டுகளாக நீடித்தது. 2023 ஆகஸ்ட் மாதம், 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த நேத்தன்…