Category: முக்கிய செய்தி
-
உலக சாதனை படைத்த இளைஞர்
18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1717ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியராக பணியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இருந்த சாதனை 306 ஆண்டுகளாக நீடித்தது. 2023 ஆகஸ்ட் மாதம், 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த நேத்தன்…
-
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா விரைவில் ஒப்பந்தம் எட்டக்கூடும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து, கடந்த சில மாதங்களாக உயர்ந்திருந்த மசகு எண்ணெய் விலை தற்போது அதிரடியாகக் குறைந்துள்ளது. இதன்படி WTI ரக மசகு எண்ணெயின் விலை 5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 76.32 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் சர்வதேச அளவிலான ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலராக பதிவாகியுள்ளது.
-
சுமந்திரனின் ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை நிறைவேற்ற திட்டம்-தர்மலிங்கம் சுரேஸ்
நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின் வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர், “இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே…
-
பாராளுமன்றத்திற்கு தீ வைக்க வந்தவர் இப்போது நீதி அமைச்சர் – நாமல் காட்டம்
பாராளுமன்றத்தை தீ வைத்து கொளுத்த வந்தவரை நீதியமைச்சராக வைத்திருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பேசுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டார். தொடர்ந்துரையாற்றிய அவர், ”தெரிந்தே பொய் சொல்லும் 159 பேரைக் கொண்ட அரசாங்கம் இது. முதலில் அரசாங்கம் ஒன்று எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிந்து செயற்படுங்கள். இந்நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருக்க வேண்டும்.…
-
ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..
முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது தவெகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை போலீஸ் வாகாந்த்தில் தஞ்சாவூருக்கு கூட்டி சென்றனர். உதயநிதியின் கைதுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லும் வழியெங்கும் திமுகவின் போராட்டம் நடத்தினார்கள். ஒரு பக்கம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திமுக தலைவர்…
-
எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக
கோவையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து அதிரடியான மற்றும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு விவகாரத்திலும் சம்பந்தமில்லாமல் திரைத்துறை பிரபலங்களைப் பற்றியும், காவிரி விவகாரம் குறித்தும் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று அவதூறாக பேசினால், சட்டம் சும்மா இருக்குமா?…
-
போதைப்பொருள் கண்டறியும் சென்சர்களுடன் களமிறங்கும் புதிய ‘மெட்ரோ பேருந்து’ சேவை!
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் நம்பகமான, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், போதைப்பொருள் கண்டறியும் சென்சர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘மெட்ரோ பேருந்து” சேவையை ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிட்’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்ப அமைப்பானது, சாரதிகளின் வாகனம் ஓட்டும் திறன் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற பாதகமான நிலைகளைத் தானாகவே கண்டறியும் திறன் கொண்டது. பயணிகள் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விபத்துகளை முன்னரே தடுத்து, இதன் மூலம் மேலதிக…
-
இந்தியாவின் எல்லையில் பாகிஸ்தான் நிறுத்தியுள்ள அதிபயங்கர ஆயுதம்
இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான ஒரு நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நிறுத்தியுள்ள இந்த அதிபயங்கர ஆயுதம் என்ன? அந்த ஆயுதத்தால் என்னென்ன கொடூரமான தாக்குதல்களை நடத்த முடியும்? இதற்கு ஒன்றிய அரசின் எதிர்வினை என்னவாக இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கடந்த 2025ஆம் ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்…
-
சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி , நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!
9 பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறும் காவல்துறை, அவரை விசாரிக்க சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வழியாக தஞ்சை அழைத்து செல்லப்பட்டு வருகிறார். விசாரணைக்கு பின் இன்றே விடுவிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது திட்டமிட்ட அலைக்கழிப்பு என்று திமுக-வினர் குற்றம்சாட்டி உள்ளனர். அரியலூர் வழியாக சென்றாலே 1 மணி நேரத்தில்…
-
வீதி விபத்தில் காயமடைந்த ‘ரந்தெனியா பண்டார’ யானை உயிரிழந்தது!
கேகாலை, ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த ‘ரந்தெனியா பண்டார’ என்ற யானை, மணம்பிட்டி பகுதியில் நடைபெற்ற பெரஹரா நிகழ்வுக்காக பாரவூர்தியில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், ஆறு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதி, மெல்சிரிபுர – ஓமரகொல்ல பகுதியில் யானையை ஏற்றிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறால் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, யானைப் பாகன் யானையை லொறியிலிருந்து இறக்கி பாதுகாப்பாக…