Category: முக்கிய செய்தி
-
சீனாவின் புதிய சாதனை – ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்
சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை…
-
வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு – பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் “அனைவருக்கும் தரமான வீடு” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 1,253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம், 24,313 அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு, 14,194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
தமிழ்நாடு பாதீடு 2026-27 : ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக…
-
உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி மனு தாக்கல் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (05) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் பரீட்சைக்கு தோற்றவிருந்த ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கே ஆணை – அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச்…
-
தென்கொரியாவில் தேசிய நெருக்கடிநிலை – வெப்பத்தால் 19 பேர் மரணம்
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்திருக்கிறார். அங்கு கடும் வெப்பத்தால் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும்படி லீ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால் தேசிய நெருக்கடிநிலை முறையை முழுமையாக மாற்றியமைக்கத்…
-
நேரலையில் சபைக் கூட்டம் – இலங்கையில் முதல் மாநகர சபை
தெஹிவளை – மலை லவினிய மாநகர சபை, தனது பொதுச்சபைக் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கிய இலங்கையின் முதல் உள்ளூராட்சி அமைப்பாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. சபையின் ஒருமனதான ஒப்புதலைத் தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணி முதல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக கூட்டங்கள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. 2025 உள்ளூராட்சி தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டு தெரிவான சமூக நீதிக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அர்கம் முனீர் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.…
-
செங்கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல்
செங்கடலில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் மூழ்கியது. கப்பல் ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக ஏமனின் கடலோரக் காவற்படை தெரிவித்தது. குறித்த கப்பல் மூழ்குவதற்கு ஏமனைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியது. குறித்த Fwpj;j MSV Faize Noore Oliya கப்பலில், 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,ஒருவர் ஏமனைச் சேர்ந்தவர். ஹொதைதா துறைமுக நகருக்குத் தெற்கே கப்பல் தாக்கப்பட்டதாக ஏமனி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் குறித்த…
-
தமிழ்மொழி பேசும் மக்களின் பேரவை இந்திய தூதுவருடன் சந்திப்பு
தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் நேற்று (04) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியது.. இச்சந்திப்பின்போது, தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அண்மையில் ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் நடைபெற்ற சந்திப்புகளில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீத மக்களை இப்பேரவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள…
-
ஸ்கார்பரோ குடியிருப்புக் கட்டடத்தில் தீவிபத்து: ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீல்சன் ரோடு மற்றும் மெக்லெவின் அவென்யூ சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புக் கட்டடத்தில் காலை 8 மணிக்குச் சற்று முன்பாக இத்தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டடத்தின் 16-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறைப் பகுதி தீவிரமாகத் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகத் தீயணைப்புத் துறை துணைத் தலைவர் பால் ஃபிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட…