Category: முக்கிய செய்தி
-
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி – இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி யூஜினி, போர்த்துகலின் லிஸ்பன் நகரிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அரச குடும்பம் வெளியிட்ட தகவலின்படி, குழந்தை திங்கட்கிழமை மாலை 6.20 மணிக்கு பிறந்ததுடன், பிறக்கும் போது 6 பவுண்டு 9 அவுன்ஸ் எடை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான இளவரசி யூஜினிக்கும் அவரது கணவர் ஜாக் புரூக்ஸ்பாங்கிற்கும் இது மூன்றாவது குழந்தையாகும். இவர்களுக்கு ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பிறந்த ஓகஸ்ட் பிலிப் ஹாக் புரூக்ஸ்பாங்க் மற்றும் 2023ஆம் ஆண்டு…
-
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை
மவுண்ட் பெலி (Mount Pelée) எரிமலை கரீபியன் தீவான மார்டினிக்கில் அமைந்துள்ளது; இது புளோரிடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,500 மைல் தொலைவிலும், இப்பகுதியை அமெரிக்காவுடன் இணைக்கும் அதிக போக்குவரத்து கொண்ட வான்வழிப் பாதைகளிலும் அமைந்துள்ளது. இந்த எரிமலையின் மிகவும் மோசமான சீற்றம் 1902-இல் நிகழ்ந்தது; அப்போது அதீத வெப்பம் கொண்ட மேகம் ஒன்று செயின்ட்-பியர் (Saint-Pierre) நகரை ஊடுருவிச் சென்று, சில நிமிடங்களிலேயே சுமார் 30,000 பேரின் உயிரைப் பறித்தது; மேலும் சமீபத்தில் 1929 மற்றும் 1932-க்கு…
-
ஈரான் – ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்
ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்…
-
ஜப்பானை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி
பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியதென ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பொனின் தீவுகளை ஏற்கனவே கடந்துள்ள இந்த சூறாவளி, வார இறுதியில் ஒகினாவா தீவில் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கடல் அலை…
-
சீனத் தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டம்
சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியை அடுத்து, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். தரவுகளை ஃபைபர்-ஒப்டிக் கேபிள்கள் மூலம் அதிவேகமாக அனுப்ப உதவும் ‘ஒப்டிகல் டிரான்சீவர்ஸ்’ என்ற சீன தரவு மைய சாதனங்களுக்கு தடை விதிக்க அமெரிக்க தகவல் தொடர்பு ஆணைக்குழு (FCC) நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்க தரவு…
-
ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு
பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக் கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது. அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச் செல்வதால்…
-
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு…
-
ரத்தப் புற்றுநோயால் ‘கஜினி’ பட வில்லன் காலமானார்
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரதீப் ராவத்திற்கு, நோய்யின் தாக்கம் குறைந்து குணமடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்தது. ‘லகான்’, ‘கஜினி’, ‘வீரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரதீப் ராவத்திற்கு, நோய்யின் தாக்கம் குறைந்து…
-
சீனாவின் புதிய சாதனை – ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்
சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அந்த நாட்டு நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை…
-
வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு – பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் “அனைவருக்கும் தரமான வீடு” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 1,253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம், 24,313 அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு, 14,194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…