Category: முக்கிய செய்தி

  • காசா அமைதித் திட்ட பேச்சுவார்த்தையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் பங்கேற்பு

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடங்கியுள்ள காசா அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் ஜெருசலேமில் பங்கேற்றார். போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பைக் கண்காணிப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) நிர்வாகக் குழு உறுப்பினராக பிளேயர் செயல்படுகிறார். ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகத் துறக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது என்றும், மறுசீரமைப்புப் பணிகள் தொடங்காது என்றும்…

  • கசிந்தது ரஷ்யாவின் ரகசிய Plan

    பெலாரஸ் மற்றும் உக்ரைன் எல்லைகளை ஒட்டி ரஷ்யா 10 ரகசிய ட்ரோன் தளங்களை அமைத்துள்ளது, அவற்றில் 59 ஏவுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தளங்கள் மூலம் போலந்து, லிதுவேனியா, லாட்வியா உள்ளிட்ட பல NATO நாடுகள் ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதல் வரம்புக்குள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கசிந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தத் பகுதிகளில் குறைந்தது 59 புதிய ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடுபாதைக்கு பதிலாக நிலையான…

  • “உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்”: சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு சட்டமன்றம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி வருகின்றது. இந்தநிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளமை அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார். அவர் பேசுகையில், “திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி…

  • அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தக் கெடு முடிந்தது: ஓமானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை எட்டவும், ஹோர்முஸ் ஜலசந்தியைப் (Strait of Hormuz) மீண்டும் திறக்கவும் வழங்கப்பட்ட 60 நாட்கள் கெடு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஓமான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமான் குறுக்கே நின்றால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வதற்கான பாதைகளை நிர்வகிக்க…

  • நெதன்யாகுவை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, அவரது மருமகனும் அமெரிக்கத் தூதருமான ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார். இதற்கு ஒரு நாள் முன்னதாக, எகிப்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹய்யா உடன் குஷ்னர்  பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததால், ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை துறக்கும்…

  • சர்வதேசத்தை அதிரவைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு!

    காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என்றும், அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர் கூறியுள்ள கருத்து சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இணையவழி உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இடாமர் பென்-க்வீர், “குஷ் கட்டிஃப் (Gush Katif) பகுதி மட்டுமல்லாது காசா முழுவதிலும் மீண்டும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும். பாலஸ்தீன மக்கள் அதிக அளவில்…

  • நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி

    ‘சர்வதேச விசாரணை தேவை’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு–கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றடைந்தது. இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல்…

  • பனிக் கரடியின் தூக்கத்தை கலைத்துவிட்டாராம்.. படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

    அசந்து தூங்கி கொண்டிருந்த பனிக்கரடியின் தூக்கத்துக்கு இடையூறு செய்து எழுப்பிய புகாரில் படகு ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பனிக்கரடியை தூக்கத்தை கலைத்ததற்கும் அபராதம் விதிப்பார்களா? என்று நீங்கள் கேட்டால் அந்த நாட்டின் சட்டம் அப்படியாக உள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். நார்வே நாட்டுக்கு சொந்தமாக ஸ்வால்பார்டின் என்ற தீவுக்கூட்டம் உள்ளது. இது நார்வே நாட்டின் வடதுருவத்தில் இருந்து சுமார் 620 மைல்…

  • வடபுலத்தின் தொன்மைமிகு நல்லைக்கந்தனின் கொடியேற்றம் இன்று

    வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர். தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இம்மகோற்சவத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மஞ்சம் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் திகதி மாம்பழத்…

  • நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

    நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்று(16) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.