Category: முக்கிய செய்தி
-
ரஷ்ய ஜனாதிபதி – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், நேற்று இரவு மாஸ்கோ சென்றடைந்தார். இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று ரஷ்ய ஜனாதிபதி…
-
பாகிஸ்தான் ராணுவத் தளபதி மீண்டும் ஈரானில்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்த ஆண்டில் 3-வது முறையாக ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். ஜூன் 17-இல் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 60 நாள் கெடு முடிவடைந்ததாலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதாலும் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருக்கும் பாகிஸ்தான், தூதரக வழிமுறைகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.…
-
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக, யுக்ரைன் முன்னெடுத்து வரும் போராட்டத்தை, இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஜெர்மனிக்கு எதிராக பிரித்தானியா மேற்கொண்ட போராட்டத்துடன் பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் ஒப்பிட்டுள்ளார். யுக்ரைனின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு பிரித்தானியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். யுக்ரைனின் 35ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் அண்டி பர்ன்ஹாம் இன்று கியேவுக்கு சென்றுள்ளார். அங்கு யுக்ரைன்,ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களை…
-
வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்
அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி நடத்தப்படும் இந்த ‘Freedom 250 Grand Prix’ கார் பந்தயத்தை சுமார் இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வொஷிங்டனின் புகழ்பெற்ற ‘பென்சில்வேனியா’ வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல்…
-
வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
வங்கதேசத்தில் 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தின் ரங்க்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்தம்பதியின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரியம் (12). கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார்…
-
இந்த வாரம் கனடா வானில் பகுதி சந்திரகிரகணம்
2026 ஆகஸ்ட் 27 இரவு முதல் ஆகஸ்ட் 28 அதிகாலை வரை கனடாவில் பகுதி சந்திரகிரகணம் தென்படவுள்ளது. ஐரோப்பாவின் சில பகுதிகளில் (ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல்) முழு சூரியகிரகணம் நிகழ்ந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நிலவு பூமியின் அடர்ந்த நிழல் பகுதிக்கு (Umbra) செல்லும் போது இது நிகழ்கிறது. அதற்கு முன், மங்கலான வெளி நிழல் பகுதிக்கு (Penumbra) நிலவு செல்லும் என்றாலும், அதை வெறுங்கண்ணால் கண்டறிவது கடினம். இது முழு சந்திரகிரகணம்…
-
பாகிஸ்தானில் ஆட்சி கலைப்பா? ஆபத்தில் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்!
கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று பதவியை இழந்தார். இதையடுத்து, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார். இப்படியான சூழலில், ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்கும் பெரும் ஆபத்து வர இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு, உடல்நலம்…
-
ஈரானில் பொருளாதார நெருக்கடி: மக்களை தயார்படுத்தும் அரசாங்கம்
ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் மக்களைத் தயார்படுத்தி வருகிறது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள துறைமுகக் முற்றுகை மற்றும் தொடர்ச்சியான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் 93 மில்லியன் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் (மானிய விலையில்) எரிபொருள் வழங்குவது அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச் சுமையாக மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணிப்பின்படி 2026 ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி…
-
கினியாவில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி, கனமழை காரணமாக சரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்தச் சரிவில், குப்பைக் கிடங்குக்கு அருகிலிருந்த குடிசைகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 16 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும்…
-
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி: 81,000க்கும் அதிகமானோர் குடிநீரின்றி தவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில்…